சனி, 24 டிசம்பர், 2016

Late CM ஜெயலலிதா கொலை செய்யப்பட்டார் .. ஜெயாவின் நெருங்கிய தோழி வக்கீல் கீதா வழக்கு அடித்து கூறுகிறார் !


நக்கீரன் கேள்வி பதில் :
1-ஜெயலலிதாவின் கருப்பு பூனை படை எங்கே போனது ?
2- 1991 இல் திமுக அரசை கலைப்பதாக சந்திரசேகர் வாக்குறுதி கொடுத்து விட்டு பின்பு கலைஞர் நன்றாக ஆட்சி செய்கிறார் எப்படி கலைப்பது என்று பின்வாங்கினர் ,அதனால் வருத்தமுற்ற ஜெயா அரசியலை விட்டு விலகுவதாக கூறினார் . பின்பு சந்திரசேகர் திமுகவை கலைத்தார் . அதனால் ஜெயா என்னை தேர்தலில் அதிமுகவில் வேட்பாளராக என்னை வேண்டினார்.
3- ஜெயாலலிதா  செப்டெம்பர் மாதமே இறந்திருக்க கூடிய சாத்தியம் உள்ளது  எம்பாம் செய்திருப்பது போல தான் தோன்றுகிறது. 
4 -காடியாக் அரெஸ்ட் என்று ஒரு டிராமா ஏன் போட்டாங்க ? அப்புறம் ஆஞ்சியோ என்னாங்க ..அந்த பாத்திமா பாபு ,சரஸ்வதி பேட்டிகொடுக்கிறாங்க ..தமிழ்நாடு ஜனங்க அவ்வளவு முட்டாளா ? காடியாக் அரஸ்ட்டுண்ணா எல்லாம் முடிஞ்சுது அப்புறம் என்ன ஆஞ்சியோ ? ஜனங்க எல்லாம் என்ன படிக்காதவங்களா ?
5 -  8 ந்தேதி  செங்கோட்டையனை  கேட்டேன் , ஒருத்தனாவது அழுதீங்களா .. எல்லாரும் சிரிச்சிகிட்டே இருந்தீங்க .
 6 - ஜெயலலிதா கொலை செய்யப்பட்டிருக்காங்க இது நூத்துக்கு நூறு உண்மை.
 7-  அப்புறம் அவுனுங்க : சசிகலா பதவி கேக்கல நாமதான் அவுங்களுக்கு கேக்கிரோம்னாங்க .. இந்த மாதிரி சினிமா கதையெல்லாம் எனேக்கும் தெரியும்னேன் .. அப்புறம் கட்சிய உடச்சிடாதீங்கம்மான்னாங்க . 


8 -  நீங்க ஆட்சில இருக்கணும் அனுபவிக்கனும் ஆனா கட்சிக்கு உயிர் கொடுத்தவங்க  தொண்டர்கள் எல்லாம் உங்க அநியாயத்தை பாத்துகொண்டு இருக்கணுமா? அந்த தொண்டன் பாவம்  அழுதிட்டே இருந்தான் ரோட்டு ரோட்டா கண்ணீரோட இருந்தான்
9  -  இவனுங்க .. பக்கத்தில இருந்தவங்க எல்லாம் என்ன தொண்டனுன்களா?
10 - குடும்பத்தில எவ்வளவுதான் சண்டை இருந்தாலும் அவிங்க அண்ணன் பொண்ண கேவலமா தள்ளி விடுறது என்னங்க நியாயம்?
11 - நடராஜனை சந்தியுங்க என்னாங்க .. யாரு நடராஜன ? எனக்கு அவரை சந்திக்க வேண்டிய அவசியம் கிடையாதுன்னேன்
12 - பிஜெபில இருந்து கால் பண்ணினாங்க , கீதா ஏன் வீணாக சண்டைக்கு போகிறாய் என்னாங்க . எங்க கட்சில (பாஜக ) எல்லாரையும் சசிகலா குருப் விலைக்கு வாங்கிடுச்சுன்னாங்க
13- என்னை இவங்க தொட்ட கண்டிப்பா மேலே ஒரு போர்ஸ் இருக்கு கண்டிப்பா வரும் .
உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5;ந்தேதி உயிரிழந்தார். மெரினா கடற்கரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர் பாக கோர்ட்டுகளிலும் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. அரசியல் பிரமுகர்கள் பலரும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார் கள். இந்த நிலையில் ஜெயலலிதாவின் குடும்ப நண்பரான வக்கீல் கீதா எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்ப தாகவும், அதனை வெளிக் கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக கோர்ட்டு வளாகத்தில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும். இதற்காக போயஸ் கார்டன் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள வீடியோ பதிவுகளை வெளியிட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக