புதன், 14 டிசம்பர், 2016

கேரளாவில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்களின் கைதை எதிர்த்து போராட்டம்


இந்த சம்பவம் நடந்தது கேரளாவில் ஆனால் சுப்பிரமணியம் சாமி தமிழ்நாட்டில் நடந்ததாக வடநாட்டு ஊடகங்களுக்கு துர்ப்பிரசாரம் செய்கிறான் ( see youtube) கேரளாவில் சர்வதேச திரைப்பட விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்க தவறிய 12 பேரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கிற்கு வெளியே போராட்டங்கள் நடைபெற்றன.  தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்கும் மக்கள் சினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது அதில் தேசியவாதத்தைத் திணிக்கக்கூடாது என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். அந்த 12 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்; திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும், பார்வையாளர்கள் அதற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஞாயிறன்று சென்னையில், திரையரங்கு ஒன்றில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத பலரை வலது சாரி ஆர்வலர்கள் தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக