புதன், 14 டிசம்பர், 2016

அதிமுக பிரமுகர்களின் சட்டைப்பைகளில் சின்னம்மா படம் ... நேற்றுவரை இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் என்ற சுலோகம் ..

சசிகலா 4 ஜெயலலிதாவுக்கு சமம்- புரட்சிப்புயல் வைகோ.. இதை ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது சொல்லி இருக்கவேண்டியதுதானே?
அதிமுக பொதுச்செயலாளராக சின்னம்மா என்று அதிமுக-வினரால் அழைக்கப்படும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரங்களைக் கொடுத்துவரும் அதிமுக-வினர் யார் படத்தை பெரிதாக வைப்பது என குழம்பிப் போயுள்ளனர். சில படங்களில் சின்னம்மா என்று கொட்டை எழுத்தில் விளம்பரங்கள் போட்டாலும், படத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதா உடல் அருகே சசிகலா நிற்கும் படங்களையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், அதிமுக-வினர் சட்டைப் பாக்கெட்டில் சசிகலா படம் புதிதாக இணைந்துள்ளது.
எந்த அரசியல் கட்சி பிரமுகர்களாக இருந்தாலும் அவர்கள் அணிந்திருக்கும் வெள்ளைச் சட்டை பாக்கெட்டில் பளிச்சென தெரியும்படி இருக்கும் அந்தந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் படம். திமுக என்றால் கலைஞர், ஸ்டாலின் படங்கள் இருக்கும் அதிமுக என்றால் ஒரே ஒரு படம்தான் முன்னர் இருக்கும். அது ஜெயலலிதா படம்.
ஆனால் இப்போது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவை பொதுச்செயலாளராக ஆக்க அத்தனை அதிமுக பிரமுகர்களும் முயன்றுவரும் நிலையில், சர்வ அதிகாரமும் பொருந்திய நபராக மாறியிருக்கிறார் சசிகலா. ஒரு ரூபாய்க்கு வாங்கும் இந்த அரசியல் தலைவர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார் சசிகலா. அதிமுக பிரமுகர்களின் பாக்கெட்டில் இதுவரை இருந்துவந்த ஜெயலலிதாவின் படத்தோடு சசிகலாவின் படமும் இணைந்திருக்கிறது. பாக்கெட்டில் இப்போதைக்கு இரண்டு படங்கள் வைத்திருக்கிறார்கள். ஒன்று ஜெயலலிதாவுடையது, இன்னொன்று சசிகலாவுடையது. இப்போதைக்கு பாக்கெட்டில் தெரியும்படி ஜெயலலிதா படமும், அதன்பின்னால் சின்னம்மா என்று அழைப்படும் சசிகலா படமும் உள்ளது. ஜெயலலிதா பின்னுக்குப் போய் விரைவில் சின்னம்மா முன்னுக்கு வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக