திங்கள், 26 டிசம்பர், 2016

ரூபாய் செல்லாது .. இப்போது நிதீஷ்குமார் ஆதரிக்கல .. வெளக்கெண்ணைக்கு இப்ப தெளிஞ்சுடுச்சு!

ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் அதிகளவிலான பாதிப்பால் மோடிக்கு எதிராக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் திரும்பியுள்ளார்.
கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையாக உயர் மதிப்பு ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தபோது, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு ஆகியோர் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். இதில் சந்திரபாபு நாயுடு பாஜக கூட்டணியில் இருப்பதால் அவர் ஆதரவு கொடுத்ததை பற்றி யாரும் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் மோடிக்கு ஆரம்பம் முதல் எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிதிஷ்குமார், மோடியின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்தது அரசியல் பார்வையாளர்களின் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரூபாய் நோட்டு பிரச்சனை, தொடக்கம் முதலே பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்ததால் சந்திரபாபு நாயுடு தனது முடிவை மாற்றிக் கொண்டு சமீபத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, தற்போது பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் , பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் இதுவரை மவுனம் சாதித்து வந்த அவர் தனது நிலையை மாற்றி ரூபாய் நோட்டு பிரச்னையில் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாரத்தின் ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. ரூபாய் நோட்டு பிரச்னையில் மவுனம் காத்துவந்த லல்லு பிரசாத் யாதவ், பின்னர் மத்திய அரசின் முடிவுவை எதிர்த்து மாநிலம் தழுவிய போராட்டத்தை அறிவித்துள்ளார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் நன்மை, தீமை குறித்து முதலமைச்சர் நிதிஷ்குமார், நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் கருத்துக்களையும் அவர் கேட்கத் திட்டமிட்டுள்ளார். இதில் ரூபாய் நோட்டு தொடர்பாக அதிக எதிர்ப்புவரும்பட்சத்தில் அவரும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிப்பார் எனத் தெரிய வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லல்லுபிரசாத் யாதவும், நிதிஷ்குமாரம் சந்தித்து கொண்டபோது, நிதிஷ்குமார் 50 நாட்களுக்கு மட்டும் காத்திருக்க முடிவு செய்துள்ளார். அதன் பிறகும் நிலைமை சரியாக விட்டால் எதிரான நிலையை எடுப்பார் என்று நிதிஸ் குமார் கூறியதாக லல்லு பிரசாத் கூறினார்.
அதையடுத்து, ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டு இன்றுடன் 50 நாட்கள் ஆகிறது. அது முடிந்ததும் நிதிஷ்குமார் தனது கருத்தை வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது. தற்போது எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மோடிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு திரட்டி வருகிறார். அதில் நிதிஷ்குமாரும் பங்கேற்பார் எனத் தெரியவருகிறது.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக