வியாழன், 8 டிசம்பர், 2016

ஜெயலலிதாவின் உயில் ! ஒவ்வொரு சொத்துக்கள் வாங்கும் போதும் புதிதாக ஒரு உயில் எழுதுவது அவரது வழக்கம்

ஜெ.வுக்கு சொந்தமாக அவரது பெயரி லேயே உள்ள அசையும்-அசையா சொத்துகள் இவை. இவற்றை வேட்புமனு தாக்கலிலும் குறிப்பிட்டிருக்கிறார்.

* 79 (31 ஏ), போயஸ்கார்டன், கத்தீட்ரல் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-86 சொத்துமதிப்பு: 10,220 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில் -1 டூ 4 தளத்தில் தனிக் கட்டிடம் * 424(614). அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-06

சொத்து: காலியிடம் *
 442/18 ஏஎ (602/18) பர்சு மேனர், அண்ணாசாலை, ஆயிரம் விளக்கு, சென்னை-06
சொத்து: 180 சதுர அடி * 81(36), போயஸ் கார்டன், கத்தீட்ரல் சாலை, தேனாம்பேட்டை, சென்னை-86 21,662 சதுர அடியில் 0 டூ 3 தளத்தில்

தனிக் கட்டிடம் * 213/இ செயிண்ட் மேரிஸ் சாலை, மந்தவெளிப்பாக்கம், சென்னை-28

சொத்துமதிப்பு: 1500 சதுர அடியில் தரைத்தளம் முதல் தளம் கொண்ட தனிக்கட்டிடம்.
கையிருப்பு தொகை - 41,000 ரூபாய் *

ஜெயலலிதா பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களின் சொத்துமதிப்பு:

1) ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன் - 21,50,54,080 ரூ.

2) சசி எண்டர்பிரைசஸ் - 20,12,570 ரூபாய்

 3) கொடநாடு எஸ்டேட்- 3,13,20,633 ரூபாய்
4) ராயல் வேலி ஃப்ளோர்டெக் எக்ஸ்போர்ட்ஸ்- 40,41,096 ரூபாய்
5) கிரீன் டீ எஸ்டேட்- 2,2027,071 ரூபாய் மொத்தம்- 27,44,55,450 ரூபாய் * 25 வங்கிகளிலும் உள்ள மொத்தப்பணம் - 10,63,83,945.51 ரூபாய் * ஜெயலலிதா பெயரிலுள்ள கார்களின் மொத்த மதிப்பு- 42,25,000 ரூபாய் 1250 கிலோ சில்வர் பொருட்களின் மதிப்பு - 3,12,50,000 ரூபாய் *
 அசையா சொத்துகள்-
1) ஜீசிமேட்லா கிராமம் மேட்சல் சாலை, ரங்காரெட்டி மாவட்டம், தெலுங்கானா 14.50 ஏக்கர் தற்போதைய மார்க்கெட் விலை -14,44,37,300 ரூபாய்

2) செய்யாறு கிராமம் 366/2,5,6, காஞ்சிபுரம் மாவட்டம்3.43 ஏக்கர் தற்போதைய மார்க்கெட் விலை - 34,00,000 ரூபாய் *

இந்த சொத்துகள் தனக்குப் பின் யாருக்கு என்பது குறித்து ஜெ. எழுதியுள்ள உயில் முக்கியத் துவம் பெறுகிறது. 1990-ல் தொடங்கி புதுப்புது சொத்துகள் சேரும் போது புது உயில் எழுதுவது ஜெ.யின் வழக்கம் என்கிறார்கள் அவரது வழக்கறிஞர்கள்.
இந்த சொத்துகளுக்கு தனது வாரிசாக யாரை அறிவித்துள்ளார் ஜெ. என்பது அடுத்த கட்ட ஆர்வத்தை தூண்டியுள்ளது. -மனோசௌந்தர்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக