வியாழன், 15 டிசம்பர், 2016

ராகுல் காந்தி :மோடியின் ஊழல்.. ஆதாரங்கள் உள்ளன ... பஞ்சாப் கூட்டத்தில் மோடிக்கு அவமானம்



புதுதில்லி பிரதமர் நரேந்திர மோடி ஊழலில் ஈடுபட்டதற்கான விரிவான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து தில்லியில் பேசிய ராகுல் கூறியதாவது: -மோடி ஊழலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. இதைத் நான் வெளிப்படுத்தினால், மோடியின் உண்மையான முகம் மக்களுக்கு தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் தான், தொடர்ந்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் என்னை பேச விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் பேசும் மோடி, நாடாளுமன்றத்தில் மட்டும் பேச அச்சப்படுவதற்கு காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். ஊழல் தொடர்பான தகவலால் பிரதமர் மோடி பயத்தில் உள்ளார். மக்களவையில் பேச அனுமதித்தால் நான் மோடியின் ஊழல் நடவடிக்கைகளை வெளிப்படுத்துவேன் என்றும் கூறினார். தினமணி.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக