சனி, 3 டிசம்பர், 2016

மக்களின் பணத்தை வங்கிகள் வட்டி இல்லாமல் ரிசேர்வ் வங்கிக்கு கொடுத்து விட்டன .. இப்போ வாடிக்கையாளர்களுக்கு வட்டி கொடுக்க வேண்டுமே?

செல்லாக்காசு விவகாரத்தால் பல பிரச்சனைகள். இந்தக் கட்டுரை வங்கிகள் சந்திக்கவிருக்கும் ஒரு பிரச்சனையை சொல்கிறது. நேற்று முன்தினம் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்கள் இதைச் சுட்டிக்காட்டின.
அதாவது, இந்திய வங்கிகளில் தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் டெபாசிட் ஆகின்றன. இந்தப் பணத்தை வங்கிகள் குறைந்த வட்டிக்கு கடனாக அளிக்க ஆரம்பித்தால் சந்தையில் பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால், இப்போது வந்திருக்கும் தொகை அனைத்தையும் தன்னிடம் டெபாசிட் செய்ய வேண்டுமெனச் சொல்லிவிட்டது ரிசர்வ் வங்கி. வழக்கமாக 4 சதவீதத்தை மட்டுமே ரிசர்வ் வங்கியிடம் டெபாசிட் செய்ய வேண்டும்.
இப்போது வங்கிகள் சந்திக்கும் பிரச்சனை என்னவென்றால், தங்களிடம் குவிந்திருக்கும் பணத்திற்கு, வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறைந்தது 4 சதவீத வட்டியாவது கொடுக்க வேண்டும். ஆனால், அந்தப் பணத்தையெல்லாம் வட்டியில்லாமல் ரிசர்வ் வங்கிக்குக் கொடுத்தாகிவிட்டது. ஆக, வங்கிகள் தங்கள் லாபத்திலிருந்துதான் இந்த வட்டியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

எல்லையில் ராணுவம் பனியில் நிற்கும்போது இப்படியெல்லாம் கட்டுரை எழுதலாமா?  முகநூல் பதிவு  முரளிதரன் காசி விசுவநாதன்

2 . கோவையில் கோடிஸியா என்கிற அமைப்பில் அங்கம் வகிக்கும் 51 சிறு தொழில் அதிபர்கள் மாவட்டத்தில் 70 சதவீத தொழில்கள் முடங்கி விட்டனவென்றும் பிரதமர் மோடியைச் சந்தித்து நிவாரணம் கேட்கப்போவதாகவும் அறிவித்துள்ளனர். ரொக்கமாகச் சம்பளம் கொடுக்கவில்லையென்றால் நாங்கள் சொந்த ஊருக்குத் திரும்பப் போவதாக பிற மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் சொல்லிவிட்டதால் இந்த நெருக்கடி. நாட்டின் பிறபகுதிகளிலுள்ள சிறுதொழில் முனைவோரின் நிலையும் இதுதான்.
இந்தச் சிறு தொழிற்சாலைகள்தான் பல பெரிய தொழில்களுக்கும் ஆதாரமாய் இருக்கின்றன.
தொழிலாளர்களையும் முதாலாளிகளையும் ஒரே அடியில் நிலைகுலையச் செய்வது மேக் இன் இந்தியாவா அல்லது பிரேக் இன் இந்தியாவா?
சொல்லுங்கள் பக்தர்களே!  முகநூல் பதிவு   vijayasankar ராமச்சந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக