சனி, 3 டிசம்பர், 2016

எந்திரன் 2.0 கருப்பு பண நடிகனும் கருப்பு பண இயக்குனரும் கருப்பு பணத்தில் கருப்பு பணத்துக்கு எதிராக படம் எடுக்கிராக .

SHANKARvinavu.com :ஷங்கரின் இயக்கத்தில் வெளியான எந்திரனின் இரண்டாவது பாகம் 2017 தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இது 2.0 என்ற பெயரில் அழைக்கப்படும் அத்திரைப்படத்தின் முதல் பார்வை விழா. எந்திரனுக்கு சன் குழுமத்தின் கலாநிதி மாறன் சுமார் 130 கோடி ரூபாய் செலவழித்தார். இரண்டாவது பாகத்திற்கு இலண்டன் வாழ் லைக்கா மொபைலின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா சுமார் 350 கோடி ரூபாயை செலவழிக்கிறார்.

எந்திரனில் எழுந்த ரோபாவான சிட்டி, இரண்டாவது பாகத்தில் இன்னும் அதிக வீரியத்துடன் செதுக்கப்பட்டு ரஜினி, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்தி நடிகர் அக்ஷய் குமாருடன் 3 டி படமாக வெளிவருகிறது. முதல் பாகத்தின் இரு பரிமாணத்தை விட இரண்டாம் பாகத்தின் முப்பரிமாணம் தரத்திலும், செலவிலும், நுட்பத்திலும் பிரம்மாண்டமாகத்தான் இருந்தாக வேண்டும். அதிகம் குவிந்திருப்பதால் மட்டுமே பணம் தனது பளபளப்பை பராமரிக்க இயலாது. மேலும் மேலும் தன்னைப் பெருக்கிக் கொள்வதே நிதிக்கலையால் மிளிரும் பணத்தின் ஆகச்சிறந்த அழகு.

முதல் பாகத்தில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் சிரமம் இருந்தது என்றால் இரண்டாம் பாகத்தில் தோளில் எவரெஸ்ட் சிகரத்தை சுமந்து கொண்டு உச்சியில் ஏறும் மீப்பெரும் சிரமமும் பொறுப்பும் இருப்பதாக இயக்குநர் ஷங்கர் விழாவில் தெரிவித்தார். வருத்தப்பட்டு பாரம் சுமக்கும் பாமரருக்கு விருப்பப்பட்டு பாரம் சுமக்கும் திரைக்கலைஞனின் வலி தெரியாதாம்.
Lyca Jayamohan 2.0 - 1இந்தி எந்திரனான ரோபோவின் முன்னோட்ட விழாவும் இதே மும்பையில்தான் நடந்தது. இரண்டு பாகங்களும் இந்தியாவின் வணிக தலைநகரமான மும்பையில் மட்டுமே அறிமுகப்படுத்தும் அருகதை கொண்டவை.
விழா விருந்தினர்களை பாதுகாத்து அழைத்துச் செல்வதை விஸ்கிராப்ட் விழா மேலாண்மை நிறுவன ஊழியர்களும், பவுன்சர்களும் ஒய்யாரமான மிடுக்குடன் செய்கின்றனர். அரங்கினுள்ளே மூன்று பெரிய திரைகளில்  கணினியின் பைனரி மொழி மினுமினுக்கிறது. 2.0 விழா ஏற்பாடுகளுக்கான செலவிலேயே ஒரு டஜன் படங்களை தயாரித்து விடலாம் என்கின்றார்கள், ஆங்கில ஊடக சினிமா பத்திரிகையாளர்கள்.
பாலிவுட்டின் இயக்குநர் – தயாரிப்பாளர் கரண் ஜோகர் அனைவரையும் அறிமுகப்படுத்துகிறார். இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத நாள் என்கிறார்.  இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ரஹ்மான், கலை இயக்குநர் முத்துராஜ், இந்தி உரையாடலை எழுதிய அப்பாஸ் டயர்வாலா, படத்தொகுப்பாளர் ஆண்டனி, புகைப்படக் கலைஞர் நீரவ் ஷா, கண்கட்டும் சிறப்புக் காட்சி மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாச மோகன், பாடலாசிரியர் மதன் கார்கி, ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, நடிகர்கள் ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் அனைவரும் மேடை ஏறுகின்றனர். ஒருவர் மட்டும் கொஞ்சம் வெட்கத்துடன் இடது வரிசையில் நிற்கிறார். அவர் எழுத்தாளர் ஜெயமோகன். அவர்தான் 2.0-வின் தமிழ் வசனகர்த்தா. இன்னொருவரும் படக்குழுவின் ஓரத்தில் பணிவுடன் நிற்கிறார். குறுந்தாடியுடன் புன்னகை தவிர வேறு பாவனை அறியாத முகத்துக்குச் சொந்தக்காரரான அவர் லைக்கா மொபைல் அதிபர் சுபாஷ் கரண்.

Lyca Jayamohan 2.0 - 2
மும்பை பெண்ணிடம் சொதப்பினாலும் மும்பை இயக்குநரிடம் வரலாற்று சிறப்பு மிக்க திரைப்படத்தில் பங்கேற்பதை பெருமை அடைகிறேன் என்று தொண்டைக்குள் இருந்து வெளியேற்றிவிட்டார். கூடவே தான் எழுத்தாளர்தான், சிறந்த பேச்சாளர் இல்லை என்றார். தயாரிப்பாளர் சுபாஷ்கரண் பெருந்தொகையை இந்த படத்தில் கொட்டியிருந்தாலும் எப்படி அவரால் சிரிக்க முடிகிறது என்று கரண் ஜோகர் கேட்கிறார். கதை பிடித்திருந்தது, இயக்குநருக்கு ஓகே சொல்லிவிட்டேன், வெறொன்றுமில்லை என்கிறார் சுபாஷ்கரண். இப்படி ஒரு தயாரிப்பாளரா என்று வியக்கிறார் கரண் ஜோஹர்.
Lyca Jayamohan 2.0 - 5
கருப்புப் பணத்தை விளக்கி படமெடுக்க கருப்புப் பணமும் தேவைப்படாதா? மேடையில் கரண் ஜோகருடன் லைக்கா சுபாஷ்கரன் மற்றும் அவரது குழுவினர்.
முதல் பாகமான எந்திரனின் அறிமுக விழா 2010-ம் ஆண்டில் நடந்த போது இருந்த நகைச்சுவையும், ஊடகங்களை அருகில் அனுமதித்த பாங்கும் இப்போது இல்லை என்று வருத்தப்படுகிறது scroll ஸ்க்ரால் எனும் ஆங்கில ஊடகம். படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் நிதியுலக மாந்தர்கள்தான் அருகில் அமர வைக்கப்பட்டனர் என்றும் அந்த ஊடகம் கூறுகிறது. என்ன இருந்தாதலும் பட்ஜெட் இரண்டு மடங்காகும் போது வர்த்தக பிதாமகர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதை தவறென்று சொல்ல முடியாது. சொல்லப் போனால் ஊடகங்களின் வர்த்தகமே சினிமாக் கடவுளை நம்பித்தானே?
எந்திரனில் வில்லனாக வந்த ரோபோ சிட்டி அரங்கின் முன்னிருக்கையில் ஹோலோ கிராம் வடிவில் அமர்ந்து கொண்டு கரண் ஜோகருக்கு பதிலளிக்கிறது. அதிலொரு கேள்வி “பணமதிப்பிழக்கம் குறித்து என்ன கருதுகிறீர்கள்?” உடனே சிட்டிக்கு குரல் கொடுத்த ரஜினி “சிவாஜி”யிலேயே கருப்புப் பணத்தை சூறையாடிவிட்டேன் என்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக