வியாழன், 22 டிசம்பர், 2016

வைகோ அதிமுகவோடு லவ்ஸ் ... நஞ்சில் சம்பத்து திமுகவோடு லவ்ஸ்.. .. யார் யாரோட போவாய்ங்களோ?

சொத்து குவிப்பு வழக்கில் அவர் தண்டனை பெற வாய்ப்புக்கள் அதிகம். அப்படி நிகழும் பட்சத்தில், மதிமுகவினை அதிமுகவுடன் இணைத்து அதன் பொதுச்செயலாளர் பதவியைக் கைப்பற்ற வைகோ போடும் திட்டமே இந்த கூட்டணி திட்டம். சென்னை: ஜெயலலிதா மறைவிற்குப் பின், அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கும் நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி இருப்பதாக, பரபரப்பாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால், அதை மறுத்துள்ளார், அவரது மகள். இருந்தபோதும், அவர், அ.தி.மு.க.,வில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகவே, அவரது நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன. விரைவில், அவர் தி.மு.க.,வில் இணைவார் என்றும், இதற்காக, நாஞ்சில் சம்பத்திடம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
வைகோவுடன் இடைவெளி:இது குறித்து, நாஞ்சில் சம்பத்துக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது: ம.தி.மு.க.,வின் பிரசார பீரங்கியாகவும், அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோவின் உற்ற சீடராகவும் இருந்து, தேய்ந்து போன அக்கட்சியை, தமிழகம் முழுவதும் தூக்கிப் பிடித்து பிரசாரம் செய்து வந்த நாஞ்சில் சம்பத்தையும், வழக்கம் போல் வைகோ, சந்தேகப்பட ஆரம்பித்தார். அவர், விரைவில் தி.மு.க.,வில் இணையப் போகிறார் என, வைகோவே கட்சியினரிடம் சொல்ல, இருவருக்கும் இடையில் திடீர் இடைவெளி ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், கட்சியில் இருந்து விலக முடிவெடுத்தார் நாஞ்சில் சம்பத்.


அ.தி.மு.க.,வில் இணைவு:


இந்த விஷயம் அறிந்ததும், அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா, நாஞ்சில் சம்பத்திடம் பேசி, கட்சிக்கு வருமாறு அழைக்க, உடனடியாக, அ.தி.மு.க.,வில் இணைந்தார் சம்பத். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவக் கல்லூரியில் சீட், வீடு கட்ட உதவி, இன்னோவா கார், கட்சியில் கொள்கை பரப்பு துணைச் செயலர் பதவி, அதிகாரப்பூர்வ பேச்சாளர் என, ஏகப்பட்ட பொறுப்புகளையும், பரிசுப் பொருட்களையும் வாரி வழங்கினார் ஜெயலலிதா.

ஜெ., புகழ் பாடு:


அ.தி.மு.க., அரசியல் வரலாற்றில் இப்படியொருவருவருக்கு, ஜெயலலிதா ஏற்கனவே செய்ததில்லை. இதனால், நெகிழ்ந்து போன நாஞ்சில் சம்பத், ஜெயலலிதாவை போற்றி, அவரது புகழ் பாடுவதையே, முழு நேர செயலாக கொண்டிருந்தார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், வைகோவின் துரோகத்தை, பட்டியலிட்டு பேசுவதையும் வாடிக்கையாக்கினார்.

கோபம்:


வைகோ குறித்து, டி.வி., பேட்டி ஒன்றில் கடுமையாக விமர்சிக்க, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் பார்வைக்கு இதை கொண்டு சென்றார் வைகோ. உடனே, நாஞ்சில் சம்பத்திடம் இருந்து, கொள்கை பரப்பு துணை செயலர் பதவி பறிக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ டி.வி., பேச்சாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இதனால், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட நிலைக்கு, நாஞ்சில் சம்பத தள்ளப்பட்டார். இதன் பின்னணியில் முழுக்க முழுக்க சசிகலா இருப்பதை உணர்ந்து, நாஞ்சில் சம்பத் புழுங்கினார். அதன்பின், கட்சியில் அவருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாமல் போனது.

குழப்பம்:


இந்நிலையில், ஜெயலலிதா இறந்து, கட்சியை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர, சசிகலா தீவிர முயற்சியில் இருக்க, என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார் சம்பத். இருந்தபோதும், நாகர்கோவிலில் அமைதியாக ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கும் அவர், தி.மு.க., நண்பர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். அவர் தி.மு.க., மீது திடீர் பாசம் கொண்டிருக்கும் தகவல் அறிந்த தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், சம்பத்திடம் பேசி, பேசாம தி.மு.க.,வுக்கு வாங்க என்று அழைக்க, விரைவில் சம்பத் தி.மு.க., பக்கம் போவது என முடிவெடுத்து விட்டார்.

வைகோவின் முயற்சி:


ஜெயலலிதா மறைவுக்குப் பின், ம.தி.மு.க.,வை, அ.தி.மு.க.,வோடு கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சியில் வைகோ இறங்கி இருக்க, அதற்கு சசிகலா தரப்பும் ஆதரவளிப்பதாகவும் நாஞ்சில் சம்பத்துக்கு தெரிய வந்தது. பிரதமர் மோடியை வார்தா புயல் சம்பந்தமான நிதி உதவிக்காக, வைகோ சந்தித்ததாக கூறப்பட்டாலும், தமிழக அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய பா.ஜ., அரசின் அழுத்தங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்றும், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராகவும்; முதல்வராகவும் சசிகலாவே வருவதற்கு நீங்கள் உதவிட வேண்டும் என்றும் கூறியதாகவும் தகவல் பரவி உள்ளது.

தி.மு.க.,வில் இணைய முடிவு:


இப்படி கூட்டணியாக வைகோ அ.தி.மு.க., பக்கம் நெருங்குவது, அவரது பகையாளியான நாஞ்சில் சம்பத்துக்கு பிடிக்கவில்லை. வைகோ கூட்டணியில் இணையும் பட்சத்தில், கட்சிக்குள் தனக்கு கடுமையான நெருக்கடி வரும் என்று எதிர்பார்க்கிறார் சம்பத். இதனால், தானே முன்வந்து ஒதுங்கி வேறு பக்கம் ஓடிவிடலாம் என்று இருந்த சூழலில்தான், சம்பத்திடம், ஸ்டாலின் பேசியுள்ளார். இதனால், விரையில், சம்பத் தி.மு.க., பக்கம் போகக்கூடும். இதற்கிடையில், சசிகலா ஆதரவாளர்கள் சிலரும் சசிகலா சார்பில் சம்பத்திடம் பேசியதாகவும், அதன் பின், கடும் குழப்பத்தில் சம்பத் ஆழ்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக