வியாழன், 22 டிசம்பர், 2016

அனைத்திந்திய அம்மா திமுக ஆரம்பம் .. நாளை பத்திரிகையாளர் சந்திப்பு!! ரொம்ப தேவை?

மறைந்த  முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருங்கிய நட்புடன் இருந்த சுலோச்சனா சம்பத்தின் மகன் இனியன் சம்பத் ,இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய சகோதரரும் ஆவார் . தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக நீண்ட நாட்கள் சுலோச்சனா சம்பத் பதவியில் இருந்தார்.
இனியன் சம்பத்  ஆரம்ப காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியவர். கடந்த 1989ம் ஆண்டு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்தவர். 2011ம் ஆண்டு தேசிய மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை ஆரம்பித்து, பழ. நெடுமாறன் கட்சியான தமிழர் தேசிய முன்னணியுடன் இணைத்துக்கொண்டார். பின்னர் அதிலிருந்து விலகி, தமிழ் தேசிய கட்சியை தொடங்கினார். இந்நிலையில், இனியன் சம்பத் தற்போது ‘‘அம்மா திமுக’’ கட்சியை வரும் 24ம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நாளை நடைபெறவுள்ளாதாகவும் கூறப்படுகிறது. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக