வியாழன், 8 டிசம்பர், 2016

கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து சசிகலா கொலை செய்திருக்கிறார்.வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி


மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனாவில் உள்ள எம்ஜிஆரின் நினைவிடம் அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, லட்சக்கணக்கான மக்கள் அவரின் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜெலலிதா மருத்துவமனையில் அனுமதித்திலிருந்து அவரின் உடல் போயஸ் கார்டனுக்கு வந்தது வரை பல்வேறு சந்தேகங்களையும், அதிர்ச்சி நிகழ்வுகளும் சமூக வலைத்தளங்களில் செய்திகளாக பரவி வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் இறப்பு குறித்து சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள ஆடியோவில், ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்து விவரம் அவரிடம் இருப்பதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து சசிகலா கொலை செய்திருக்கிறார் என்று அவர் பேசியுள்ளார்.

மேலும், நானும் மன்னார்குடி காரன்தான் எனவும், எனக்கு எல்லாம் தெரியும். சசிகலா நீ ஓடிபோயிரனும் என அவர் ஆவேசமாக அந்த ஆடியோவில் பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வாட்ஸ்  அப்பில் வைரலாக பரவி வருவதால் அதிமுகவினரிடையே கடும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. லைவ்டே .இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக