வியாழன், 8 டிசம்பர், 2016

ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் கண்ணீர்!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் ஜெயலலிதாவின் மரணத்தை பற்றி கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். ஜெயலலிதாவின் அப்பா ஜெயராமின் முதல் மனைவி ஜெயாவின்  மகனான வாசுதேவன் மைசூரில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பேட்டியளித்துள்ள வாசுதேவன் “எனது தங்கை ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை, அவர் எனது தந்தை இரண்டாவது மனைவியின் மகளாக இருந்தாலும் ஜெயலலிதாவை நான் எனது சொந்த தங்கையாகவே நினைத்து வந்தேன். எனது மனைவி மற்றும்  மகனின் மறைவால் தவித்து வந்த எனக்கு ஜெயலலிதாவின் மரணம் மிகவும் பாதித்துள்ளது.
தலைவியை இழந்த  தமிழ்நாட்டு மக்களுக்கு வலியை தாங்கிக் கொள்ளும் சக்தியை சாமுண்டீஸ்வரி தேவி வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். லைவ்டே.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக