புதன், 28 டிசம்பர், 2016

ஆளுநர் எச்சரிக்கை :பன்னீரை கவிழ்த்தால்? ..ஸ்டாலினை ஆட்சி அமைக்க அழைப்பேன்..!

கவர்னர் தெளிவாக இருக்கிறார். நாளை நடக்கவிருக்கும் அதிமுக பொதுக்குழு என்பது இந்தியாவே எதிர் பார்த்து காத்திருக்கும் ஒரு அரசியல் நிகழ்வு. ஜெ., இல்லாமல் நடக்கும் முதல் பொதுக்குழு. சசி டீம் கட்சி,ஆட்சி இரண்டையும் கைப் பற்ற பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வருகிறது. கட்சியைக் கைப்பற்றுவதை கூட டெல்லி பொறுத்துக் கொள்ளும் . ஆனால் ஆட்சி என்பது பன்னீருக்கு மட்டும் தான் என்பதில் கவர்னர் உறுதியாக இருக்கிறார். பிரதமரும் அதற்குத்தான் ஆதரவு தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள். இந்த நிலையில் சசி டீம் பன்னீர் மீது கடும் ஆத்திரத்தில் இருகிறார்கள். ஜெ.,விடம் காட்டிய பவ்யமோ, பணிவோ, பயமோ சசியிடம் பன்னீர் காட்டுவதில்லை. ஊரே திரண்டு சின்னம்மா ..சின்னம்மா ..உருகித் தள்ள பன்னீர் மட்டும் எனக்கு அம்மா மட்டும்தான் சின்னம்மா, பெரியம்மா, நடு அம்மா என்று யாரும் இல்லை என்று ஒரு போடு போட்டார். கூட்டிக் கழித்துப் பார்த்த சசி டீம் இவர் அதுக்கெல்லாம் சரிப்பட மாட்டார் பொதுக்குழு கூடி சசி பொதுச்செயலாளர் ஆன கையோடு பன்னீரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கிவிட வேண்டும் என்று முடிவே செய்துவிட்டார்கள் என்று செய்தி அடிபடுகிறது.
ஆனால், இவர்களின் கனவு பலிக்காது. ஒருவேளை முதல்வர் பன்னீருக்கு சசி டீமால் ஆபத்து நேர்ந்தாலோ,இடைஞ்சல் கொடுத்தாலோ அடுத்த ஒரு மணி நேரத்தில் ஸ்டாலினை அழைத்து உங்கள் பலத்தைக் காட்டி ஆட்சி அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட தயாராக இருக்கிறார் என்கிறார்கள். எப்படி பார்த்தாலும் நாளை மாலை எல்லாம் வெளிச்சத்திற்கு வந்து விடும். லைவ்டே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக