புதன், 28 டிசம்பர், 2016

பேராசிரியர் அன்பழகன் .. திராவிட முன்னேற்ற கழக மாமருந்து!


சுயமரியாதை-பகுத்தறிவு இரண்டையும் தனது கால்களாகக் கொண்டு 94 வயதிலும் தளராமல் இலட்சியப் பாதையில் பயணிப்பவர். இயக்கத்தின் நலன் காக்கும் வகையில் தலைமைக்குத் துணை நிற்பவர். வெற்றி-தோல்விகளுக்கு அப்பாற்பட்ட அரசியல் நெறியாளர். தி.மு.க.வில் ஆர்.எஸ்.எஸ். ஸ்லீப்பர் செல்கள் அதிகரித்து வரும் நிலையில், வள்ளுவர் முதல் வள்ளலார் வரையிலான தமிழ்ப் பண்பாட்டு (விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட இந்து பண்பாடு அல்ல) வழியில் வாழ்பவர். 2001-2006 அ.தி.மு.க ஆட்சியின்போது சோதனை என்ற பெயரில் வீட்டுக்குள் நுழைந்து ஏதாவது சிக்காதா என அலமாரிகளைப் புரட்டிப் போட்டு ஏமாந்த காவல்துறையினரிடம், “புத்தகங்களையெல்லாம் தூசு தட்டி அடுக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தேன். நீங்க வந்து அதை செஞ்சிட்டீங்க” என்று ‘நன்றி’ பாராட்டியவர். தி.மு.கவின் கொள்கை முகவரியாய் நிலைத்திருக்கும் பேராசிரியர் க.அன்பழகன் நூறாண்டு கடந்து நலமுடன் வாழட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக