செவ்வாய், 6 டிசம்பர், 2016

தோழர், புரட்சியாளர் பி.வி.சீனிவாசன் மறைவு..

CPI (ML) Liberation கட்சியின் தலைவர்களில் ஒருவரும், தமிழக நக்சல்பாரி இயக்கத்தின் legend களில் ஒருவருமான தோழர் பி.வி.எஸ் நேற்று இரவு டெல்லியில் 3.30 மணி அளவில் காலமான செய்தி சற்று முன் கிடைத்தது. இன்று மதியம் 1 மணிக்கு கட்சி மரியாதைகளுடன் டெல்லியில் அவரது உடல் எரியூட்டப்பட உள்ளது. அவர் ஒரு புரட்சியாளர். சிறந்த மார்க்சீய அறிஞர். ஒரு வாழ்வை புரட்சிகர நம்பிக்கைகளுக்காக அர்ப்பணித்தவர். சிறைவாசம், தலைமறைவு வாழ்க்கையில் பல ஆண்டு காலம் கழித்தவர். அவரது சகோதரி தோழர் ரத்னா அவர்கள் மூத்த தோழர் கோவை ஈஸ்வரன் அவர்களின் மனைவி.
'தீராநதி' க்காக மீனா அவர்கள் ஈஸ்வரனை நேர்கண்டபோது ஒரு காலைப் பொழுது முழுவதும் தோழர் பி.வி.எஸ்சுடன் கழித்ததும், சென்ற ஆண்டு டெல்லியில் நடைபெற்ற AIPF மாநாட்டில் அவரைச் சந்தித்ததும் நினைவில் நின்று கண்ணீர் மல்க வைக்கின்றன.

ஒரு வாழ்வைப் புரட்சிகர நம்பிக்கைகளுக்காக அர்ப்பணித்து அனைத்து நடைமுறை வாழ்க்கைச் சுகங்களையும் இழந்து வாழ்ந்து மடிந்த தோழருக்குச் செவ்வஞ்சலிகள்.... முகநூல் பதிவு  மாக்ஸ் அந்தோணிசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக