செவ்வாய், 6 டிசம்பர், 2016

ஜெயலலிதாவின் இரத்த உறவினர் எவரும் அனுமதிக்கப்படவில்லை .. ஜெயாவால் விலக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் போயஸ் கார்டனில் !

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை யாரை எல்லாம் ஒதுக்கி வைத்தாரோ அவர்கள் அனைவரும் இன்று
ஜெயலலிதா அருகிலேயே நின்று கொண்டுள்ளனர். ரத்த சொந்தங்கள் யாரும் அருகில் நிற்கவில்லை. ஜெயலலிதாவின் உடல் அருகே நின்று கொண்டிருந்த சசிகலாவும், இளவரசியும் சிறிது நேரத்தில் சேர் போட்டு அமர்ந்தனர். ஜெயலலிதாவின் வாய் லேசாக திறந்து கொண்டிருக்கவே பின்னர் நாடிக்கட்டு கட்டப்பட்டது. ஓபிஎஸ், வெங்கையா நாயுடு அதிமுக
எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், அனைவரும் படியில் வரிசையாக அமர்ந்து கொண்டிருக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் தங்கள் தலைவியின் மரணத்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்


சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை இரவு இதயம் செயலிழப்பு ஏற்பட்டதால் காலமானார். அவரது
உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.
அப்போது போயஸ் தோட்ட இல்ல வாசலுக்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குடும்பத்தினரை அனுமதிக்கவில்லை. இறுதி சடங்குகள் செய்யப்படும் போதும் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
தலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி அரங்கிற்கு வந்தடைந்தது.
கண்ணீர் அஞ்சலி:; ஜெயலலிதாவின் குடும்ப முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு ஜெயலலிதாவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசு மரியாதை செய்யப்பட்டு தேசிய கொடி போர்த்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.>மன்னார்குடி குடும்பம் ஜெயலலிதாவின் உடல் அருகே சசிகலா, இளவரசி, டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன், இளவரசியின் மகன் விவேக், மருமகள், டாக்டர் சிவகுமார் அவரது மனைவி பிரபாவதி , பாஸ்கரன் உள்ளிட்ட மன்னார்குடி சொந்தங்கள்தான் சுற்றி நின்று கொண்டிருக்கின்றனர்.
சசிகலா நடராஜன்
ஜெயலலிதாவின் உடல் அருகே அவரது ரத்த சொந்தங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் நீண்ட நாட்களாக போயஸ் தோட்டத்து பக்கமும், அதிமுக தலைமை அலுவலகம் பக்கமும் எட்டியே பார்க்காத எம். நடராஜன், ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்தார்.
இளவரசி
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை யாரை எல்லாம் ஒதுக்கி வைத்தாரோ அவர்கள் அனைவரும் இன்று ஜெயலலிதா அருகிலேயே நின்று கொண்டுள்ளனர். ரத்த சொந்தங்கள் யாரும் அருகில் நிற்கவில்லை. ஜெயலலிதாவின் உடல் அருகே நின்று கொண்டிருந்த சசிகலாவும், இளவரசியும் சிறிது நேரத்தில் சேர் போட்டு அமர்ந்தனர். ஜெயலலிதாவின் வாய் லேசாக திறந்து கொண்டிருக்கவே பின்னர் நாடிக்கட்டு கட்டப்பட்டது.
ஓபிஎஸ், வெங்கையா நாயுடு
அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், அனைவரும் படியில் வரிசையாக அமர்ந்து கொண்டிருக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் தங்கள் தலைவியின் மரணத்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். ஓ.பி.எஸ், தம்பித்துரை, வெங்கையா நாயுடு ஆகியோர் கவலை தேய்ந்த முகங்களுடன் கலங்கிய கண்களுடன் ஜெயலலிதாவின் கால்மாட்டில் ராஜாஜி ஹால் படியில் ஸ்டூல் போட்டு அமர்ந்து கொண்டு இருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக