வியாழன், 15 டிசம்பர், 2016

‘ஜெயலலிதாவின் ஹைதராபாத் சொத்துகள் தெலங்கனா அரசு ஏற்க வழக்கு!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹைதராபாத்தில் சொத்துகள் உள்ளன. அந்த சொத்துகளுக்கு ஜெயலலிதா எழுதிய உயில் ஹைதராபாத்தில் உள்ளா மேச்சல் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இருப்பதாகவும், அந்த உயிலில் தன் சொத்துகள் சிலவற்றை உறவுக்காரப் பெண் ஒருவர் பெயரில் எழுதிவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண் யார்? உண்மையிலேயே, அப்படி ஒரு உயில் உள்ளதா? என்று செய்திகள் எதுவும் உறுதியாகாத நிலையில், ஜெயலலிதாவின் சொத்துகளை தெலங்கானா மாநில அரசே ஏற்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை கரிப் கைடு அமைப்பின் தலைவர் பார்கவி தொடர்ந்துள்ளார். அதில், ஐதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகளை தெலங்கானா அரசே ஏற்று நிர்வகிக்க வேண்டும். அந்த சொத்துகளில் யாரும் சொந்தம் கொண்டாட அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிடவேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக