புதன், 14 டிசம்பர், 2016

சசிகலாவை எதிர்த்த இந்து ராம் இன்று அவரை சந்தித்தார் .. பேரம் படிந்தது? .. இந்து பத்திரிகைக்கு அரசு விளம்பரங்கள் உறுதி?

Hindu N Ram meets Sasikalaசென்னை: மூத்த பத்திரிகையாளரான இந்து என் ராம் இன்று திடீரென சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்து பேசினார். அதிமுகவை சசிகலா கைப்பற்ற நினைத்தால் பேரழிவுதான் ஏற்படும் என கடுமையாக விமர்சித்த இந்து ராம் திடீரென போயஸ் கார்டனுக்கு விசிட் அடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தினார் சசிகலா. இதற்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் இந்து ராம். அரசியல் சாசனத்துக்கு அப்பாலான சக்திகள் அரசாங்கத்தை வழிநடத்தக் கூடாது என ராம் கூறியிருந்தார்.
 ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று சசிகலாவை அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதற்கும் இந்து ராம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். குறிப்பாக, சசிகலாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலும், அதை நம்பி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால், அது பேரழிவான ஓர் ஏற்பாடாக முடியும் எனவும் எச்சரித்திருந்தார் இந்து ராம். இதனிடையே இன்று திடீரென போயஸ் கார்டனுக்கு சென்ற இந்து ராம் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது, அதிமுகவில் கூட்டுத் தலைமைதான் தற்போதைய அவசியம் என்ற தம்முடைய கருத்தை சசிகலாவிடம் இந்து ராம் வலியுறுத்தினாரா என்பது குறித்து தெரியவில்லை tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக