புதன், 14 டிசம்பர், 2016

சந்திரலேகா ஐ ஏ எஸ் மூலம்தான் சசிகலாவுக்கு ஜெயாவின் அறிமுகம் கிடைத்தது .. பின் சந்திரலேகாவுக்கு அசிட் ....

1980-ல் எம்.ஜி.ஆர் இரண்டாவது முறையாக முதல்வரானார். அப்போது ஜெயலலிதாவை கட்சியை விட்டு விலக்கி வைத்திருந்தார். அவருடன் கட்சிக்காரர்கள் யாரும் தொடர்பு வைத்து கொள்ளக்கூடாது என்றும் கட்டளையிட்டிருந்தார். இதனால், கட்சிக்காரர்கள் மற்றும் சினிமா துறையினரும் ஜெயலலிதாவை ஒதுக்கி வைத்திருந்தார்கள். இந்த காலம் ஜெயலலிதாவை ரொம்பவே கஷ்டத்தில் ஆழ்த்தியது. இந்த காலகட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சில பேருக்கு அவர்மீது இரக்கத்தை ஏற்படுத்தியது. மதுரையில் உலக தமிழ் மாநாடு நடத்திய எம்.ஜி.ஆர் சிறப்பு நிகழ்ச்சிகளாக நாடகங்கள் நடத்த கூறியிருந்தார். அங்கு நாடகம் நடத்த ஜெயலலிதாவுக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தை பார்த்த எம்.ஜி.ஆர் ஜெயலலிதா மீதான கோபம் தணிந்து அவருக்கு கட்சியில் ஏதாவது பொறுப்பு கொடுக்கலாம் என்று தீர்மானித்தார். ஜெயலலிதாவிற்கு 1982ம் ஆண்டு கொள்கை பரப்பு செயலாளர் பதவியும், பின்னர் எம்.பி பதவியும் வழங்கினார்.
கடலூரில் ஜெயலலிதா நடத்திய சத்துணவு திட்ட நிகழ்ச்சிகள் வெகுவாக மக்களிடையே சென்று சேர்ந்தது. இதற்கு முழுமையாக உதவியர் அப்போது கலெக்டராக இருந்த சந்திரலேகாதான். அப்போது சந்திரலோகாவிடம் பிஆர்ஓ வாக இருந்தவர் தான் நடராஜன். ஜெயலலிதாவிற்கு நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து கற்று கொடுப்பதற்காக சந்திரலேகாவை சென்னைக்கு இடமாற்றம் செய்தார் எம்.ஜி.ஆர். கூடவே, நடராஜனும் இடமாற்றம் வாங்கி கொண்டு வந்துவிட்டார். ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்ற நிகழ்வுகளை கற்று  கொடுத்த சந்திரலேகா மூலமாகத்தான் நடராஜன் தன்னுடைய வீடியோ கடையிலிருந்து மனைவி சசிகலா மூலம் ஆங்கில படங்களின் கேசட் கொடுப்பதற்காக போயஸ் கார்டன் சென்று வந்தார். நாளடைவில் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானார் சசிகலா. லைவ்டே.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக