வியாழன், 29 டிசம்பர், 2016

பி.ஜே.பி. சவாரி செய்தவதற்கு மிகப் பொருத்தமான கட்சி அதிமுக... அதை ஆதரிப்பது பி.ஜே.பி. யை ஆதரி்ப்பதுதான்... மதிமாறன்

மதிமாறன் : 2013 -14 ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது பிர்லா குரூப்பின் சகாரா நிறுனத்திடம் பணம் பெற்றார்’ என்று ராகுல் இன்று ஆதராத்தோடு அம்பலப்படுத்தியிருக்கிறார்.
அந்த மோடி அரசுதான், தமிழகத் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை செய்து ஊழலை கண்டுபிடிக்கிறது.
இதைச் செய்வதற்கு மோடி அரசுக்கு யோக்கியதை இல்லை என்றாலும், இதை விட்டால் ஆளும் வர்க்கத்தின் ஊழல்கள் அம்பலமாவதற்கு வாய்ப்பே இல்லை.
புரட்சிகர, நேர்மையான அரசு வந்துதான் ஊழல் மீது நடிவடிக்கை எடுக்கணும் என்றால் ஊழல் வெளியே வரவே வராது.
அதிகாரப் போட்டி, பழி வாங்கும் நடவடிக்கை, ஆட்சியைக் கை பற்றுவதற்கான நோக்கம், ஆளும் கட்சி, எதிர் கட்சி சண்டை;
இந்திய ஜனநாயக அமைப்பில் இந்த முறையில் ஊழல்கள் அம்பலவாதைத் தவிர வேறு வழியே இல்லை.
அந்த வகையில் இந்த ரெய்டை நான் ஆதரிக்கிறேன்.
< மற்ற கட்சிகளைப் போல் பி.ஜே.பி. வெறும் கட்சி மட்டுமல்ல, அது இந்து ஆதிக்கப் பண்பாட்டின் அடையாளம். அதற்கு அதிகாரத்தை விடத் தன் திட்டங்களை நடைமுறை படுத்துவதுதான் நோக்கம்.
ஆக, அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்பதால் பி.ஜே.பி. க்கு எந்த நன்மையும் இல்லை என்பது மட்டுமல்ல, நஷ்டம்.

உடனே தேர்தல் வந்தால், அதில் டெபாசிட் இழந்து, T. ராஜேந்திரை விடக் குறைவான ஓட்டு வாங்கப் போவது பி.ஜே.பி தான்.
ஆகையால், ஜெயலலிதா ஆட்சியிலிருந்தே நடந்த ஊழல் குற்றச்சாட்டை ஒட்டு மொத்தமாக ஓ. பன்னீர்செல்வம் மேல் சுமத்தி, அதிமுகவிலிருந்து வேறு ஒருவரை தேர்தெடுத்து தமிழக முதல்வராக்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
பிறகு, அதிமுக அரசின் மூலமாகவே தன் திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்வதும், அதன் பிறகு தேர்தல் கூட்டணியில் அதிமுகவிடம் கூடுதல் சீட் வாங்கிக் கட்சியைத் தமிழகத்தில் பெரும் சக்தியாக வளர்த்துக் கொள்ளும்.
அதிமுகவில் பி.ஜே.பி. எதிர்ப்பு என்பது எப்போதும் இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த மிக மோசமான வன்முறைகளை ஒரு வார்த்தையால் கூடக் கண்டிக்கவில்லை. சமஸ்கிருதம், இந்தி திணிப்பு குறித்தும் அவர் வாய் திறந்ததில்லை.
ஜெயலலிதா இருக்கும்போது தவிர்க்கப்பட்ட நீட் தேர்வை இப்போது அதிமுக அரசு அமல் படுத்தியிருக்கிறது.
பி.ஜே.பி. சவாரி செய்தவதற்கு மிகப் பொருத்தமான கட்சி அதிமுக. ஆதிக்க ஜாதியை (பார்ப்பனர்) சேர்ந்தவர்கள் தமிழகத்தில் அதிமுக வையும் மத்தியில் பி.ஜே.பி. யையும் விரும்புவது அதனாலேதான்.
இன்னும் 4 ஆண்டுகள் அதிமுக அரசு சிக்கல் இல்லாமல் தொடர்நது நீடிப்பது பி.ஜே.பி.க்குதான் அதிக லாபம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக