செவ்வாய், 20 டிசம்பர், 2016

டாடா இயக்குநர் பதவியிலிருந்து மிஸ்திரி ராஜிநாமா

டாடா குழுமத்தைச் சேர்ந்த 6 நிறுவனங்களின் இயக்குநர் பதவியை சைரஸ் மிஸ்திரி ராஜிநாமா செய்துள்ளார். டாடா குழுமத்துக்கு எதிரான போராட்டத்தை விசாலமான களத்தில் (சட்டரீதியாக) மேற்கொள்ளப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத்தின் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரிக்கும், ரத்தன் டாடாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அப்பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இருந்தபோதிலும், அக்குழுமத்தைச் சேர்ந்த டாடா ஸ்டீல்ஸ், இந்தியா ஹோட்டல் உள்ளிட்ட 6 நிறுவனங்களின் இயக்குநர்களில் ஒருவராக அவர் பொறுப்பு வகித்து வந்ததார். இந்தச் சூழலில் அந்த நிறுவனங்களின் இயக்குநர் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிச. 20) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதில் சைரஸ் மிஸ்திரியை இயக்குநர் பொறுப்பிலிருந்தும் நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் பொறுப்பிலிருந்து அவர் விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக இரண்டு பக்க விளக்கக் கடிதத்தை சைரஸ் மிஸ்திரி வெளியிட்டுள்ளார். ஆனால், இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுவதாக நேரடியாக அவர் அதில் குறிப்பிடவில்லை. dinamani. com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக