புதன், 28 டிசம்பர், 2016

என்னை மாட்டிவிட்டு நீங்கள் தப்ப நினைத்தால் ? கூண்டோடு எல்லோரும் வருவீர்கள் ! ராம் மோகன் ராம் சசி மோதல் !


என்னை சிக்க வைத்தால்..கூண்டோடு உள்ளே போவீர்கள்..! சசிகலா- ராம மோகனராவ் கடுமையான மோதல். இறுதி எச்சரிக்கை.! கார்டன் வட்டாரம் கிடுகிடுத்துப் போய் உள்ளது.
ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு என்றதுமே முதலில் ஆடிப் போனது ராவ் அல்ல என்கிறார்கள்.
சசி தரப்பு தான் நடுங்கிப் போனது. இது எப்படி என்று கேட்டுக் கொண்டே இருந்தார்களாம். தம்பிதுரை டெல்லியில் இது பற்றி பதறிப் போய் விசாரித்துள்ளார்.
ஆனால், நக்கல் சிரிப்புதான் டெல்லியின் பதில்..! எந்த உருப்படியான பதிலோ..ஹெல்ப்போ கிடைக்கவில்லை.
ஒரு வித கலக்கத்தில் தான் ஒவ்வொரு நாளும் கழிந்தது என்கிறார்கள். அதே போல அன்றே மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார் ராவ்.
ராவோட ராவாக என்ன செய்யலாம்? எப்படி வெளிவருவது என்கிற விவாதம் அங்கு நடந்ததாம். அரசு தரப்பில் எந்தப் பதிலும் வரவில்லை.
முதல்வர் பன்னீர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தார் ராவ். அவர் டெல்லி போகும் போகும் போதே என்னவோ நடக்கப் போகிறது என்பதை எதிர் பார்த்துள்ளார் ராவ்.
அவசரமாக சில விஷயங்களை இடம் மாற்றி இருக்கிறார்கள். ஆனால், அடுத்த நாளே ரெய்டு வரும் என்று சத்தியமாக ராவ் எதிர் பார்க்கவே இல்லை.
மருத்துவமனையில் இருந்த போது சசி தரப்பு பேசுவார்கள் என்றும் எதிர் பார்த்தாராம் ராவ். ம்கூம் சசிதரப்பில் மூச் விடவில்லை.
பிரஸ் மீட்டுக்கு ஒரு முடிவோடு ஆயத்தமானார் ராவ். யாரையும் விடக் கூடாது என்று கடும் கோபத்துடன் வெளியே வந்தவர் பொங்கி விட்டார்.
வீடு திரும்பியவர் முதலில் சசி தரப்பைத் தான் தொடர்பு கொண்டார் என்கிறார்கள். கூட சேர்ந்து அனுபவித்தவர்கள் வெளியே. நான் மட்டும் உள்ளே போக வேண்டுமா..?  யாரும் தப்ப முடியாது என்று கடும் வார்த்தைகளால் வறுத்து எடுத்தாராம்.
இருதரப்பிலும் கடுமையான சண்டை என்கிறார்கள். இனி அடுத்து என்ன நடக்கும்  என்பதைப் பொறுத்து, சசி தரப்பு கடுமையான சோதனைகளை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்..!
(காது  வழிச் செய்தி மட்டுமே ) லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக