சனி, 24 டிசம்பர், 2016

டிஜிடல் அக்கிரமம் ..... மருந்தகத்தில் பணம் செலுத்த வரிசையில் நின்றேன்.. வெகு வெகு வெகு நேரமாச்சு,, அப்புறமா பாத்தா டெலிபோன் வேலை செய்யல .. முடியல்ல

Umanath Selvan மருந்தகம் ஒன்றில் சுமார் 800 ரூபாய்க்கு மருந்து வாங்கி பணம் செலுத்த வரிசையில் நின்றேன். வரிசை நகரவே இல்லை. காரணம் எல்லோரிடமும் பணம் இல்லாததால் கார்டில் தேய்க்க காத்திருந்தனர். இரண்டு லேண்ட் லைன் இருக்கின்றது. ஒன்று வர்தா புயலுக்கு போனது வாபஸ் வரவில்லையாம். மற்றொன்றில் தான் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். கால் மணி நேர போராட்டத்திற்கு பிறகு தான் ஒரு விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது. கடைசியாக மருந்தகத்திற்கு போன் செய்தவர் அழைப்பினை கட் செய்யவில்லையாம். மறுமுனையில் கட் செய்யவில்லை என்றால் அழைப்பு கட் ஆகாதாம். ஸ்பீக்கரில் போட்டு கேட்டால் வீட்டில் ஏதோ பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். அந்த எண்ணிற்கு வேறு செல்லில் இருந்து அழைத்தோம், Engaged. ஏதாச்சும் செல் மினுக்கி போன் எடுப்பார்கள் என நப்பாசை. நான்கு பேர் கத்தினோம். ஒரு அம்மணி பதறியபடி எடுத்து ஓ ஓ ஓகே என அழைப்பினை கட் செய்தார்கள். இந்த நாடகம் நடக்கும்போதே சிலர் கிளம்பிவிட்டனர்.

நானும் ஒரு முதியவரும் தான் கத்திருந்தோம். முதியவர் முதலில் ஒரு கார்டினை கொடுத்தார். DECLINED என இரண்டு காட்டியது. போன் சிக்னல் பிரச்சனையா அல்லது கார்டில் பிரச்சனையா என்று தெரியவில்லை. அப்போது அந்த முதியவர் சொன்ன டயலாக் தான் உச்சம் “இந்த கார்ட் பேங்க் ரொம்ப தூரம் இருக்கு இருங்க HDFC கார்ட் தரேன் அது பக்கத்து பில்டிங் தான்” என்றார். நல்லவேளை அது Approveவாகி விட்டது. சில நிமிடத்தில் என் வேலையும் முடிந்தது. அவரிடம் கிளம்பும்போது சத்தமா இப்படி PIN நம்பர் எல்லாம் சொல்லக்கூடாது என்றேன்.
நம்ம நெட்வொர்க்குகளை இப்படி வைத்துக்கொண்டும், அனைவருக்கும் இந்த பரிவர்த்தனைகளைப் பற்றிய அடிப்படை அறிவையும் கொடுக்காமல் எப்படி பணமில்லா பரிவர்த்தனைக்கு நாம் நகர முடியும்?  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக