செவ்வாய், 20 டிசம்பர், 2016

தந்தி டிவியில் தீபா .. அரசியலுக்கு நிச்சயம் வருவேன்.. பம்மிய பாண்டே


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தந்தி டிவிக்கு அளித்த பேட்டி அதிமுகவினரை மிகப்பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெயலலிதாவை போல எந்த கேள்விக்கும் அசராமல் பதிலளித்து பேட்டியளித்த தந்தி டிவியின் பாண்டேவை அசரடித்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அதிமுகவை கைப்பற்ற சசிகலா முயற்சிக்கிறார். இது அதிமுக தொண்டர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில் மாற்று தலைமை, 2-வது கட்ட
தலைவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் என்னதான் செய்வது என தெரியாமல் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை தலைமை ஏற்க வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது. இந்த நிலையில் தீபாவின் பேட்டியை தந்தி டிவி இன்று ஒளிபரப்பியது. வழக்கமாக தந்தி டிவியின் ஒருங்கிணைப்பாளர் பாண்டே பேட்டியெடுக்கும் தலைவர்களை மடக்கியே பிரபலமானவர். ஆனால் தீபாவுடனான பேட்டியில் பாண்டேவின் அத்தனை கேள்விகளுக்கு உடனடியா எந்த தாதமும் இல்லாமல் பதிலடி கொடுத்தார் தீபா. தீபாவும் ஒரு பத்திரிகையாளர் என்பதால் பாண்டேவுக்கு உடனுக்கு உடன் பதிலடி தந்தார். தீபாவின் இந்த ஸ்டைல் அவரது அத்தை ஜெயலலிதாவை அப்படியே பிரதிபலிக்கிறது என உற்சாகத்துடன் இருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். பாண்டேவால் கடைசிவரை தீபாவை மடக்கவே முடியாமல் போனதும் அதிமுகவினரின் உற்சாகத்துக்கு மற்றொரு காரணம், //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக