செவ்வாய், 13 டிசம்பர், 2016

10 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம்; சென்னை புறநகரில் மின்சாரம் வர மூன்று நாட்கள் ஆகும்

vardah-11 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வர்தா புயல் காரணமாக 10 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. 450 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளதாகவும் 24 உயர் மின் அழுத்த கோபுரங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகருக்குள் இன்று இரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்றும் புறநகரில் மின்சாரம் வர மூன்று நாட்கள் ஆகும் என்று மின்வாரிய அறிக்கை தெரிவித்துள்ளது.thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக