திங்கள், 28 நவம்பர், 2016

ஏ சி சி சிமெண்ட் பேக்டரி, ஈசா யோகா மையம், காருண்யா ஆக்கிரமிப்புகளை நோக்கி உங்கள் துப்பாக்கிகளை ..

thetimestamil.com :கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7.10 மணிக்கு  புறப்பட்ட பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில், கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தது. வாளையார் புதுச்சேரி செக்‌ஷன் வட்டப்பாறை அருகே வந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற ஆண் யானை மீது ரயில் மோதியது. இதில், யானை தூக்கிவீசப்பட்டு அருகில் இருந்த டிராக்கில் விழுந்து இறந்தது.>எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான ஒடியன் லட்சுமணன் கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை 30ஐத் தொட்டிருக்கிறது என்கிறார். இதுகுறித்து தனது முகநூலில் அவர் பதிந்த கருத்து.. “வாளையாருக்கு அருகில் ஒரு யானையை ரயில் அடித்துக்கொன்றிருக்கிறது. இத்தோடு மொத்தம் இப்படி கொல்லப்பட்ட யானைகளின் எண்ணிக்கை முப்பதை தொட்டிருக்கிறது.
இன்னும் விவசாயிகள் யானையை விரட்ட துப்பாக்கியை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கியை வாங்குங்கள் ஆனால் அதை ஏ சி சி சிமெண்ட் பேக்டரி, ஈசா யோகா மையம், காருண்யா ஆகிய ஆக்கிரமிப்புவாதிகளை நோக்கித்திருப்புங்கள்

அங்கே கட்டிடங்கள் முளைக்கும்வரை அவைகள் தனது வழியில்தான் சென்றுகொண்டிருந்தது அதற்குப்பின்பே கடக்க வழியில்லாமல் இந்த ரயில்வே தண்டவாளங்களை கடக்கப்பழகியது அப்படித்தான் உங்கள் விவசாய நிலங்களையும் கடக்க ஆரம்பித்தது.
ஆம் உங்கள் துப்பாக்கிகளை ஆக்கிரமிப்புவாதிகளை நோக்கித்திருப்புங்கள்
தூக்கிவீசப்பட்டு தண்டவாளத்தில் விழுந்த அதன் கடைசிப் பிளிறல் உங்களிடம் வேண்டியதும் அதுதான்…”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக