திங்கள், 21 நவம்பர், 2016

மம்தா பானர்ஜி : புதிய ரூபாயில் வங்க புலிகள் இல்லையே .. தாமரை யானை மயில் மட்டும்தான் ..


Where is Royal Bengal Tiger in Rs 2000 note? asks Mamata கொல்கத்தா: புதிய 2000 ரூபாய் நோட்டில் வங்கப் புலியின் படம் இடம் பெறாமல் போனது ஏன் என்று கேட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
இது தற்செயலாக விடுபட்டதா அல்லது வேண்டும் என்றே விட்டு விட்டு டிசைன் செய்தார்களா என்றும் அவர் கேட்டுள்ளார். இதுகுறித்து மமதா பானர்ஜி கூறுகையில், சுந்தரவனக் காடுகள் குறித்தும், ராயல் பெங்கால் டைகர் குறித்தும் உலகத்துக்கே தெரியும். புதிய 2000 ரூபாய் நோட்டில், இதை எப்படி விட்டார்கள் என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். யானை இருக்கிறது. ஆனால் புலி இல்லை.
யானையை தேசிய பாரம்பரியம் என்று சொல்வார்கள். ஆனால் தேசிய விலங்கு குறித்து அவர்கள் கவலைப்படவில்லை என்றார் மமதா.
மமதா கூறுவது புதிய 2000 ரூபாய் நோட்டில் யானை இருக்கிறது. மயில் இருக்கிறது. ஏன் தாமரை கூட இருக்கிறது. ஆனால் புலி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக