திங்கள், 21 நவம்பர், 2016

தமிழகத்தில் மெகா கூட்டணிக்கு அச்சாரம்.. திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கம்யுனிஸ்டுகள் முஸ்லீம் லீக்....

காங்கிரஸ் நடத்திய, இந்திரா நுாற்றாண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கில், லோக்சபா தேர்தலுக்கு, தமிழகத்தில் மெகா கூட்டணிக்கு அச்சாரம் போடும் வகையில், தலைவர்கள் பேசியது பரபரப்பைபை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காங்., சார்பில், நேற்று முன்தினம், சென்னை யில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் நுாற்றாண்டு விழா கருத்தரங்கம் நடந்தது. இதில், கூட்டணி மேடையாக அலங் கரிக்கும் வகையில், தி.மு.க., விடுதலை சிறுத் தைகள், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் பங்கேற்றன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர், காதர் மொய்தீன் பேசுகையில், ''மத்திய அரசு, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இது, இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ் நிலையை ஏற்படுத்தும். ராகுல் பிரதமராகும் சூழல் உருவாகியுள்ளது; நாங்கள் காங்கிரசோடு இணைந்து பணியாற்றுவோம்,'' என்றார். வி.சி., தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''காங் கிரஸ் ஆட்சிக்கு வரவும், ராகுல் பிரதமராகவும், மத்திய அரசு வாயிலை திறந்து விட்டுள்ளது. காங்கிரசை ஆட்சி அரியணையில் ஏற்ற, இந்த மேடையில் இருக்கும், அணிகள் தொடரும்,'' என்றார்.

தி.மு.க.,அமைப்புச் செயலர், டி.கே.எஸ்.இளங்கோ வன் பேசுகையில், ''நாங்கள் காங்கிரசுடன் துணை நிற்போம்; கூட்டணி தொடரும்,'' என்றார். தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் பேசுகை யில், ''நாம் அனைவரும், மத்தியில் உள்ள மோடி அரசை அகற்ற ஒன்று பட்டுள்ளோம். இது, தேர்தல் கூட்டணி அல்ல; ஆனால், மக்கள் கூட்டணி. மக்களுக்கான பிரச்னைகளுக்காக, நாம் ஒரே களத்தில் போராடுவோம்; நம் நட்பு தொடர வேண்டும்,'' என்றார்.

அடுத்த லோக்சபா தேர்தலுக்கு, தமிழகத்தில், தி.மு.க., தலைமையில், 'மெகா' கூட்டணி அமைப்பதற்கான அச்சாரமாகவே, கருத்தரங் கில் பேசிய தலைவர்களின் பேச்சு அமைந் திருந்தது.

- நமது நிருபர்  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக