புதன், 30 நவம்பர், 2016

இளங்கோவன் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில்!

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், முக்கிய காங்கிரஸ் பிரமுகருமான இளங்கோவன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கோவை கே.எம்.சி.எச். மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கோவையில் நடைபெற்ற கொங்கு மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் நேற்று பங்கேற்றார். கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு மாலை 6.30 மணியளவில் திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக கோவை பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் கூறும்போது, ‘இளங்கோவன் மூச்சுவிட சிரமப்பட்டார். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு தற்போது நல்லநிலையில் உள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவர் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்’ என்று தெரிவித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக