புதன், 30 நவம்பர், 2016

மம்தா லாலு சந்திப்பு காலத்தின் கட்டாயம்?


மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு எதிராக தீவிரமாக போராடி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களிடம் தொடர்ந்து மோடிக்கு எதிராகப் போராடுமாறு பேசி வருகிறார். மேற்குவங்கத்தில் மோதிக்கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுடன்கூட மம்தா பேசுகிறார். ஆனால் அகில இந்திய அளவில் ஒரு வலுவாக கூட்டணி இன்னும் உருவாகவில்லை. இந்நிலையில், நேற்று ராஷ்டிர ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று திடீரென சந்தித்துள்ளார்.
தலைநகர் பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் வீட்டுக்கு இரவு 8 மணியளவில் மம்தா பானர்ஜி சென்றார். அங்கு லாலு பிரசாத்துடன் அவரது மனைவி ராப்ரி தேவியும் உடன் இருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் மம்தா பானர்ஜி கூறியதாவது: ‘நான் இங்கு லாலு பிரசாத்தை பார்ப்பதற்கு வந்திருக்கிறேன். அவர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார். அவரது உடல்நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நான் சொல்வதைத்தான் லாலு பிரசாத் மற்றும் ராப்ரி தேவி கூறினர். நிதிஷ்குமார் மற்றும் லாலுவின் கட்சிகள் வித்தியாசமானவை. அவர்களது கொள்கைகளும் வேறுபட்டவை. அதேபோல் என்னுடைய கொள்கையும் வேறுபட்டது’ இவ்வாறு தெரிவித்தார். minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக