திங்கள், 14 நவம்பர், 2016

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் .. முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்.. நம்புங்க சார் ..

இடைத்தேர்தல் - ஜெ. அறிக்கை? - அதிமுகவினர் ஆச்சரியம்! அப்பல்லோ
மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளதாக சொல்லப்படும் அறிக்கையில், ’’தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், நெல்லித்தோப்பு தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள். இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். விரைவில் முழு நலம் பெற்று வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன். என் மீது அக்கறைகொண்டவர்களின் பிரார்த்தனையால் நான் மறுபிறவி எடுத்துள்ளேன்’’ என்று ஜெ. தெரிவித்துள்ளதாக உள்ளது. இந்த அறிக்கை அதிமுகவினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வளவு தெளிவாக அறிக்கை விட்டுள்ள ஜெ. இடைத்தேர்தல் தொகுதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள ஜெ. ஆடியோ வடிவில் வேண்டுகோள் விடுப்பாரா என்று கேள்வி எழுப்புகின்றனர் அதிமுகவினர்.நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக