புதன், 9 நவம்பர், 2016

காப்பறேட்டுக்கள் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை வசூலிக்க துப்பில்லை

ஜுன் 6, 2016 கணக்குப் படி இந்தியாவில் வங்கிகளின் வாராக் கடன் என்பது
6,00,000 கோடிகள் ( 6,00,000,00,00,000) அதில் இந்தியாவின் டாப் 10 நிறுவனங்கள் தான் அதிகமான கடனாளிகள். அவர்களின் மீசை மயிரைக் கூட பிடுங்க முடியாத அரசு தான்,
ஒரே நாள் இரவில் நாட்டு மக்கள், சிறு, குறு வணிகர்கள், சின்ன நிறுவனங்களின் “உழைத்து சம்பாதித்த” பணத்தை வெற்று தாளாக பாவிக்க சொல்கிறது.
இது சர்வாதிகாரமில்லையென்றால், வேறு எதை சர்வாதிகாரமென்பீர்கள்!!
500 ரூபாய் நோட்டு, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து இந்தியா முழுக்க அல்லோல அல்லோலப்படுகிறது. நேற்று இரவில் சென்னையில் இருந்து குமரி வரை தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் மாத சம்பளக்காரர்கள், அன்றாட ஏழை எளிய மக்கள் எல்லோரும் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு பொருள் வாங்குவதற்கு கையில் காசு இல்லாமல், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முடியாமல் இருக்கிற 500, 1000 ரூபாய் தாள்களை என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் பரிதவித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களுக்கு உதவுவதற்கு இங்கே ஒரு அரசாங்கம் இருக்கிறதா என்று தெரியாத நிலை இருக்கிறது என்று ஏராளமான மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.குறிப்பாக அதிமுகவுக்கு வாக்கு அளித்த பலரும், எங்களைக் காப்பாற்றுவதற்கு நாதி இல்லையா என்பதைப் போல் கதறுகிறார்கள்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடைய இலாக்காக்களை பொறுப்பேற்றிருக்கும் நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் எங்கே போனார் என்று தேடுகிறார்கள்
நிதி அமைச்சர்தான் இந்த நிலையில் தமிழக மக்களின் பணப்பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை எளிமையாக சொல்லியிருக்க வேண்டும். அரசு நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களில் 500 ரூபாய் தாள்களை பயன்படுத்த முடியுமா. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, காப்பீட்டுத் திட்டங்கள் கீர் உள்ள மருத்துவமனை போன்றவற்றில் கூடுதல் கட்டணங்களுக்கு 500 ரூபாய் தாள்களை பயன்படுத்த முடியுமா. தமிழ்நாட்டில் எங்கெங்கு அதனை பயன்படுத்தலாம் என்பதற்கெல்லாம் வாய்ப்புக்களை அவர்கள் உருவாகியிருக்க வேண்டும் அல்லது அதுபற்றியான ஆலோசனைகளையாவது நிதி அமைச்சர் தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கும் நிலையில் நிதி அமைச்சர் உள்பட எந்த அமைச்சரும் இது பற்றி கவலையில்லாமல் இருக்கிறார்கள். அண்மையில் நத்தம் விஸ்வாதன் உள்பட முன்னாள், இன்னாள் அமைச்சர்களின் பெரும் பணம் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியிருக்கிற நிலையில் அமைச்சர்களுக்கு மக்களைப் பற்றி சிந்திப்பதற்கு ஏது நேரம். அந்தக் கணக்குதானே நினைவில் வரும் என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகளே.   நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக