புதன், 9 நவம்பர், 2016

20 லட்சத்துக்கு மேல கைல ஒரு பைசா இருக்கப்படாது.. மோடியின் அடுத்த அட்டாக்?

டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து அனைவரையும் அதிர வைத்து விட்ட பிரதமர் நரேந்திர மோடி அடுத்து மேலும் ஒரு அதிரடிக்குத் தயாராகி வருவதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
அது, ரூ. 20 லட்சத்திற்கு மேல் கையில் ரொக்கமாக வைத்திருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அது சட்டவிரோதமாக அறிவிக்கப்படும் என்ற திட்டம்தான். 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு முதல் கட்டம்தான் என்றும் கருப்புப் பணம் ஒழிப்புதொடர்பாக மோடி மேலும் பல திட்டங்களை வைத்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அடுத்தடுத்து அதிரடி அடுத்தடுத்து அதிரடி அடுத்தடுத்து தனது திட்டங்களை மோடி அமல்படுத்தவுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
 மோடி வைத்துள்ள அடுத்த திட்டமாக கூறப்படுவது என்னவென்றால் ரொக்கக் கையிருப்பு ரூ. 20 லட்சம் வரைதான் இருக்க வேண்டும். அதற்கு மேல் போனால் அதை சட்ட விரோத செயலாக அறிவிக்க மோடி திட்டமிட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
 இதுதவிர தற்போது உள்ள காகித கரன்சியை ஒழித்து விட்டு பிளாஸ்டிக் கரன்சிக்கு மாறும் திட்டத்தையும் மோடி கையில் வைத்துள்ளாராம். தீவிரம் தீவிரம் கருப்புப் பணத்தை ஒழிப்பதில் மோடி தீவிரமாக இருப்பதாகவும், ஒவ்வொரு திட்டமாக அவர் அடுத்தடுத்து அமல்படுத்தப் போவதாகவும் கூறப்படுகிறது. கருப்புப் பண ஒழிப்பில் மக்கள் தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு கூறுகிறது.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக