புதன், 30 நவம்பர், 2016

கோபாலபுரத்தில் அழகிரி - ஸ்டாலின் சந்திப்பு!

திமுக தலைவர் கலைஞருக்கு இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றன. அப்போது மு.க.ஸ்டாலினும், செல்வியும் உடனிருந்தனர். பரிசோதனையின் போது அவர்கள் வெளியே நின்றனர். அந்த நேரம் பின்வாசல் வழியாக மு.க.அழகிரி தனது மனைவியுடன் வந்தார். ஸ்டாலினும் அழகிரியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டார்கள். பின்னர் மருத்துவர்கள் கலைஞருடன் ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த ஆலோசனையில் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், செல்வி, காந்தி அழகிரி உடனிருந்தனர். பின்னர் மு.க.அழகிரி தனது மனைவியுடன் பின்வாசல் வழியாக புறப்பட்டுச்சென்றார். மு.க.ஸ்டாலின் முன்வாசல் வழியாக புறப்பட்டுச்சென்றார். திமுகவிலிருந்து அழகிரி நீக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பின் ஸ்டாலினும் அழகிரியும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக