புதன், 9 நவம்பர், 2016

ஆவின் பாலில் கலப்படம் .. அமிலத்தின் அளவு அதிகம் ?

ஆவின் பாலில் கலப்படம் என்கிற செய்தி 2 ஆண்டுகளுக்கு முன்பு
சென்னையை உலுக்கியது. அந்த விவகாரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் வைத்தியநாதன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டது அப்போதைய ஹாட் தகவல்.;அந்த வைத்தியநாதன், ’""எங்கள் ஆட்சி நடக்கும்போதே, அதிகாரிகளின் சதித் திட்டத்தால் பழிவாங்கப்பட்டேன்'' என்கிறார் அதிர்ச்சிகரமாக.இது தொடர்பாக  வைத்தியநாதனை நாம் சந்தித்த போது ""ஆவின் நிர்வாக இயக்குநராகவும் ஆணையராகவும்  இருக்கும் சுனில்பாலிவால் ஐ.ஏ.எஸ். அவர்தான் என்னை சிறைக்கு அனுப்பிய பிரதான வில்லன்.  சென்னையில் ஆவின் பாலை எடுத்துச்செல்லும் டெண்டர் விடப்பட்டபோது, அதில் 7 ரூட்டுகளுக்கு என் மனைவியின் "தீபிகா ட்ரான்ஸ்போர்ட்' நிறுவனம் டெண்டர் போட்டிருந்தது. அந்த 7-லும் நாங்கள்தான் எல்-1 ஆக இருந்தோம். எங்களை அழைத்து விலைகுறைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் சுனில் பாலிவால்.
அவரது வலியுறுத்தலால், கோட் செய்யப்பட்டிருந்த விலைப் புள்ளியிலிருந்து 200 ரூபாய் வீதம் 4 ரூட்டுக்கான விலையை குறைத்தோம். இருந்தும் மற்ற 3 ரூட்டுக்கும் இதேபோல் குறைக்கச் சொன்னார். இதைத் தொடர்ந்து  எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, ""என்னையே எதிர்த்துப் பேசறியா நீ? ஒழிச்சிருவேன்''னு மிரட்டியவர், என்னை எல்லாவகையிலும் பழிவாங்கத் திட்டமிட்டார்.>இந்த நிலையில் திருச்சி, மதுரை,  மாவட்ட டெண்டர்களில் அவர் செய்த குளறுபடிகளை எதிர்த்து நான் கோர்ட்டுக்குப் போனேன். அது அவரது கோபத்தை அதிகப்படுத்தியது. ஏதாவது தவறைக் கண்டுபிடித்து, எங்கள் நிறுவனத்தை பிளாக் லிஸ்டில் வைக்கும்படி அதிகாரிகளைத்  தூண்டினார்.  அதனால் முதல்வர் ஜெ’வுக்கு சுனில் பாலிவால் குறித்துப் புகார்க் கடிதம் எழுதினேன். இதையறிந்த அவர், என்னை வலையில் சிக்கவைக்க வியூகம் வகுத்தார். அதன்படி நான் சிக்க வைக்கப்பட்டுவிட்டேன்''’என்று தன் தரப்பு நியாயத்தைச் சொன்னவர்,  அந்த சம்பவத்தையும் விளக்கினார்..

"சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு    விழுப்புரம் அருகே இருக்கும் வெள்ளிமேடு பேட்டை  போலீஸ் எஸ்.ஐ. ரவுண்ட்ஸ் போனதாகவும், அப்போ டூவீலரில் வந்த 2 பேரை மடக்கி விசாரிச்சப்போ 45 பால் கேன்களை அவர்கள் பதுக்கி வைத்திருந்ததாகவும், அந்தப் பால், திருவண்ணாமலை டெப்போவில் இருந்து வந்த எங்கள் வண்டியிலிருந்து திருடப்பட்டது என்றும் வழக்கைப் பதிவு செய்தார்கள். ஆனால், எங்கள் வண்டி இரவு 10.15-க்கே மாதவரம் பால்பண்ணைக்கு வந்து சேர்ந்துவிட்டது. மெயின் கேட்டில் வண்டியில் சீல், பாலின் எடை, தரம், அளவு எல்லாவற்றையும் சரிபார்த்து, அதற்குரிய சர்டிஃபிகேட்டையும் கொடுத்துவிட்டார்கள். பாலின் அளவும் தரமும் சரியாக இருந்தபோது, என்மீது எப்படி கலப்படப் பால் வழக்கைப் போட்டார்கள். எப்படிக் கைது செய்தார் கள்?''’என்கிறார் காட்டமாய்.

அவருடைய வழக்கறிஞர் விஜய் நம்மிடம் ‘""பால் திருடர்கள் சிலரைப் பிடித்த வெள்ளிமேடுபேட்டை போலீஸார் பதிவுசெய்த எஃப்.ஐ.ஆரில், தீபிகா நிறுவனமோ வைத்தியநாதன் பெயரோ கிடையாது. தாசில்தார் முன்னிலையில் பால் திருடர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்திலும் வைத்தியநாதனின்  பெயரையோ அவரது நிறுவனத்தின் பெயரையோ அவர்கள் சொல்லவில்லை. இதன்பின் திருவண்ணாமலை  மாவட்ட பால் ஒன்றியத்தின் ஜெனரல் மேனேஜர் பெரியசாமிக்கு ஃபோன் செய்து அவரை ஸ்டேசனுக்கு வரவழைத் தார்கள். "இது உங்க டெப்போ விருந்து வந்த  பால்தான்னு கையெழுத்துப் போடுங்கள்' என்றனர்.

அந்தக் கேன்களில் தயிர் இருப்பதைப் பார்த்த பெரியசாமி, "இதை எப்படி பால்னு சொல் றீங்க?  இதில் ஏதோ வில்லங்கம் இருக்கு. நான் கையெழுத்துப் போட முடியாது' என மறுத்து விட்டார். இந்த நிலையில், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வைத்து அவர்கள் மூலமாக வைத்தியநாதனை சிக்க வைத்திருக்கிறார். இதை சும்மா விடப்போவதில்லை''’என்கிறார் ஆவேசமாக.இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. கைக்கு எப்படிப் போனது? என காவல்துறைத் தரப்பில் நாம் விசாரித்தபோது ""ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயரதிகாரி கள், தாங்கள் நினைப்பதை சட்ட ஒழுங்கு போலீஸைக் கொண்டு நிறைவேற்ற முடியவில்லை யெனில் அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றுவது இங்கே வாடிக்கையாக்கிவிட்டது.


அப்படி மாற்றப்பட்ட  வழக்கு தான் இது. பால் யாருடைய லாரியிலிருந்து திருடப்பட்டது என்பதற்கு அடிப்படை ஆதாரங்கள் கூட இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் வைத்தியநாதன் மீதும் அவரது நிறு வனத்தின் மீதும் எஃப்.ஐ.ஆர்.பதிவு செய்யுமாறு ஆவின் நிர்வாகத் தரப்பிலிருந்து விழுப்புரம் டி.எஸ்.பி. சிலம்பரசனுக்கு அழுத்தம் தரப்படுகிறது. அதை அவர் ஏற்கவில்லை. அதனால்தான் எஃப்.ஐ.ஆரில் வைத்தியநாதன் பெயரோ அவரது நிறுவனத்தின் பெயரோ பதியப்படவில்லை.

;இதன்பின் மாதவரம் பால்பண்ணை குவாலிட்டி கண்ட்ரோல் மேனேஜர் அப்துல் ரஹீமிடம், "வைத்தியநாதனின் லாரியை சோதனை செய்யாமலே விட்டுவிட்டேன்' என எழுதி வாங்குகிறது ஆவின் நிர்வாகம். அதன்பிறகு, ஆவின் எம்.டி.சுனில்பாலிவாலும் டி.ஜி.பி.தமிழ்ச்   செல்வனும் அரசு ஆலோசகர் ஷீலாபால கிருஷ்ணனை சந்தித்து விவாதித்தனர். பின்னர் அப்போதைய டி.ஜி.பி.  ராமானுஜத்திடம் ஆலோசித்தனர். உயரதிகாரிகளின் கூட்டணியில் உருவான திட்டப்படி முதல்வர் ஜெ.வுக்கு ஒரு நோட்  போடப்பட, அதனடிப்படையி லேயே இந்த வழக்கு சி.பி. சி.ஐ.டி.க்கு மாற்றப் பட்டது

இதன்பின்னர் பால் திருடர்களிடமிருந்து பெறப் பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தில், "தீபிகா ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளருக்கு இதுதெரியும்' என்கிற ஒரு வரியை சேர்த்தார்     கள். அந்த வாசகத்தைப் பார்த் தாலே, இது இடையில் சேர்க்கப் பட்டது என்பது தெரியவரும். 180 கோடி ருபாய் திருட்டுத்தனம் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், குற்றப்பத்திரிகையில் 20ஆயிரம் ரூபாய் அளவிலேயே முறைகேடுகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது''’ என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் ஆவின் குவாலிட்டி கண்ட்ரோல் மேனேஜர் அப்துல் ரஹீமோ ‘""ஆவின் விஜிலென்ஸ் அதிகாரிகள் முதலில் என்னிடம் விசாரித்தார்கள். குறிப்பிட்ட லாரியில் சீல், பாலின் எடை, பாலின் தரம் உள்ளிட்ட 10 வகையான டெஸ்ட்டுகள் எடுக்கப் பட்டன. எல்லாம் சரியாக இருந்தது என சொன்னேன். அன்று மாலை மாதவரம் அலுவலகத்தில் எம்.டி.சுனில்பாலிவாலும் ஜே.டி. எம்.கெஜலெட்சுமியும் (தற்போதைய காஞ்சி மாவட்ட கலெக்டர்) என்னிடம் விசாரித்தார்கள். எந்த தவறும் நடக்கவில்லைன்னு உண்மையை சொன்னேன். பிறகு, கெஞ்சுவதுபோல "நீ சொல்ற ஸ்டேட்மெண்ட்தான் ஆவினை காப்பாற்றும்' என்று சொல்லி,  என்னிடம் எழுதிவாங்கினார்கள். இப்போது பாதிப்பு எனக்குதான்''’ என்று குமுறினார்.  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக