திங்கள், 14 நவம்பர், 2016

வைகோ: விஜயகாந்த் சேர்ந்ததால் ம.ந.கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கிடைக்கவில்லை .. நிலை கெட்டுபோன நயவஞ்சகனின் நாக்கு இதுதான்!

மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என விஜயகாந்த் கூறியது உண்மைதான் என வைகோ தெரிவித்துள்ளார்
மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியது உண்மைதான் என்று அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலருமான வைகோ கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தலின் போது தொகுதி உடன்பாடு மட்டும் வைத்திருந்தோம். அக்கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லாததால் நாங்கள் வெளியேறிவிடோம் எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக வைகோ தெரிவித்துள்ளதாவது: அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு சீரிய முயற்சியை மேற்கொண்டோம். மக்கள் நலக் கூட்டு இயக்கம், மக்கள் நலக் கூட்டணி என அது உருவானது. தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி கூட்டணி அமைத்தால் மிகப் பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கை இருந்தது.  உலகத்திலே பயங்கரமான ஆயுதம்? நிலை கெட்டு போன நயவஞ்சகனின் நாக்கு தான் அது 

ஊடகங்களும் அப்படித்தான் கருத்தை தெரிவித்தன. இதனால்தான் தமாகா தலைவர் வாசனும் எங்கள் அணியில் இணைந்தார்.
ஆனால் துரதிருஷ்டவசமாக மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்த பிறகு, அதுவரை எங்களுக்கு ஆதரவு தந்த ஊடகங்கள், ஏடுகள் அப்படியே நேர் எதிராக இருட்டடிப்பு செய்தன.
எங்களைப் பற்றி அவதூறாக மக்களிடத்தில் சித்தரித்தனர். ஆகையால் எங்கள் முயற்சி பலனளிக்கவில்லை;
எங்களுக்கு எதிர்பார்த்த வெற்றியும் கிடைக்கவில்லை;
விஜயகாந்த் கூறியதில் உண்மை இருக்கிறது.
நாங்கள் தொகுதி உடன்பாடு மட்டும்தான் வைத்திருந்தோம். இவ்வாறு வைகோ கூறியுள்ளார். 
Read more at: //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக