அம்பேத்கரின் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக சார்பிலான
அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு புதுவையில் டிசம்பர் 6-ம் தேதி
நடக்கவுள்ளது என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்தியில் ஆளும் பாஜக
அரசு கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் அழிப்பதாகச் சொல்லிக்கொண்டு
ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் ‘பொருளாதார அவசர நிலையை’ நடை
முறைப்படுத்திக்கொண்டிருக்கிறது. உழைத்து சம்பாதித்த பணத்தை எடுப்பதற்கே
பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இத்தகைய கொடுமை ராணுவ
சர்வாதிகார ஆட்சிகளில்கூட நடந்ததில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமைகளைப்
பறித்து ‘பொருளாதார நெருக்கடிநிலையை’க் கொண்டுவந்திருக்கும் மோடி அரசு
அரசியலமைப்புச் சட்டத்தையும் செயலிழக்க வைத்துநெருக்கடி நிலையை கொண்டு
வரக்கூடும்.
இந்நிலையில், அம்பேத்கரின் 60-வது நினைவு ஆண்டினை முன்னிட்டு, விசிக
சார்பில், ‘அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு’ புதுச்சேரியில் வரும்
டிசம்பர் 6-ம் தேதி நடத்தப்படவுள்ளது'' என்று திருமாவளவன்
தெரிவித்துள்ளார்.tamiloneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக