புதன், 2 நவம்பர், 2016

குளத்தூர் மணியின் தனித்தமிழ்நாடு பேச்சால் சீமான் பதட்டம்?

மீண்டும் தனி தமிழ்நாடு கோருவதற்கான சூழல் உருவாகி இருப்பதாக
கொளத்தூர் மணி எச்சரித்து இருக்கிறார். இதனை கேட்டு நிச்சயம் சீமான் பதற்றமடைந்து இருப்பார். காரணம், ஈழத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்த பிறகு பெரும்பான்மை தமிழர்களின் கோபம் இந்தியாவின் மீதுதான் இருந்தது. இந்திய தேசியத்திற்கு எதிரான மனநிலை தமிழக மக்களிடம் அதிகரிப்பதை உணர்ந்த இந்திய அரசு மக்களிடமிருக்கும் அந்த மனநிலையை மடைமாற்றம் செய்ய களமிறக்கப்பட்டவரே சீமான்.
இந்தியாவிற்கு எதிராக பேசவேண்டிய மக்களை குழப்பி அவர்களின் சிந்தனையை திசை திருப்பி திராவிடம் தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம் என பரப்புரை செய்ய உருவாக்கப்பட்டதே நாம் தமிழர் கட்சி.
தமிழர்களை குழப்பி திசை திருப்புவதே சீமானுக்கு வழங்கப்பட்ட பணி. அதனையும் மீறி இன்று மீண்டும் இந்திய தேசியத்திற்கு எதிரான குரல் தமிழகத்தில் ஒலித்தால் சீமான் பதற்றமடையத்தானே வேண்டும்...?  முகநூல்பதிவு   Gopal krushnan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக