புதன், 2 நவம்பர், 2016

சசிகலாவின் கட்டுப்பாட்டில் சகலதும் .. இளவரசிக்கு சிறை?

மன்னார்குடி சொந்தங்கள் தரப்பில் பரபரப்பாக விவாதிக் கப்படுவது, சசிகலா-இளவரசி சம்பந்தப்பட்ட  சப்ஜெக்ட்தான். குடும்ப உறவு களிடம் நாம் விசாரித்தபோது, ""செப்டம்பர் 22-ந்தேதி இரவு கார்டனில் மயக்கமடைந்தார் ஜெயலலிதா. அவரை உடனடியாக அப்பல்லோ வில் சசிகலா அட்மிட் செய்ய, அப்போது  தி.நகர் பங்களாவில் தங்கியிருந்த இளவரசியை அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவமனைக்கு வரவழைத்தார் சசிகலா. அதன்பிறகு இன்றுவரை அப்பல்லோவிலிருந்து இளவரசி வெளியே சென்ற நேரம் மிக மிக குறைவு. அப்பல்லோவை விட்டு சசிகலா பலமுறை வெளியே சென்று திரும்பியிருக்கிறார். ஆனால், அப்படிப்பட்ட வாய்ப்பு இளவரசிக்கு மறுக்கப்பட்டுள் ளது'' என்கிறார்கள் மெல்லிய குரலில். ஏன் என்று கேட்ட போது, நீண்ட விளக்கம் வெளிப்பட்டது. ""சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவிதான் இளவரசி. அதாவது சசிகலாவின் அண்ணி. ஜெ.வின் ஹைதர பாத் பங்களாவில் மின்கசிவு விபத்தில் ஜெயராமன் பலி யாக, அவரை கார்டன் பாதுகாப்பில் கொண்டு வந்தவர் சசிகலாவின் தம்பி திவாகரன் தான்.
இளவரசி வருகையை துவக் கத்திலிருந்தே சசிகலா ரசித்ததில்லை. கார்டனில் இளவரசிக்கு தனி மரியாதை இருந்தாலும் சசிகலாவிடமே கூடுதல் அதிகாரம் தந்திருந்தார் ஜெ.>பல சொத்துக்கள், பங்கு பரிவர்த்தனை கள், பல்வேறு நிறுவனங்களின் பொறுப்புகள் என அனைத்திலும் சசி மற்றும் இளவரசியின் சொந்த பந்தங்கள் உள்ளே நுழைக்கப்பட்டன. ஆண்டுகள் பல கடந்த நிலையில் , இரு தரப்பும் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர்...நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக