ஞாயிறு, 27 நவம்பர், 2016

வங்கியில் ஏன் சாதி கேட்கிறார்கள்? பணம் மாற்றுவதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்? நல்லகண்ணு கேள்வி.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் சனிக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்தக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.;அப்போது ஆர். நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகவும், கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். இது ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் புதிய ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டு வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது.
மேலும், வங்கிகளுக்கு பணம் எடுக்கச் சென்றால் அதற்காக கொடுக்கப்படும் விண்ணப்பங்களில் தாழ்த்தப்பட்டவரா, பிற்படுத்தப்பட்டவரா, மிகவும் பிற்படுத்தப்பட்டவரா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பணம் எடுப்பதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இதனை ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது’’என்று தனது கண்டனத்தை தெரிவித்தார்.நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக