தமிழக
அரசின் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக இருந்து ஒய்வு பெற்ற
ஜெயராமனுக்கு சொந்தமான சென்னை வீட்டில் நேற்று(15/11/1016) லஞ்ச ஒழிப்பு
டிஎஸ்பி தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், ரூ.50 லட்சம் ரொக்கம்
மற்றும் ஏராளனமான ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார்
தெரிவித்துள்ளனர்.
ஒய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரொக்கப் பணமும் ஆவணங்களும் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வு பெற்ற பொறியாளர் வீட்டிலேயே இவ்வளவு பணமும் ஆவணங்களும் சிக்கியுள்ளதால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வீட்டிலும் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக நெடுஞ்சாலைத் துறையில், கடந்த 1981-ல் உதவிப் பொறியாளராக சேர்ந்தவர் கே.ஜெயராமன். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, கடந்த 2013-ல் நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளராக பதவி வகித்து ஓய்வு பெற்றவர். இந்தநிலையில் 2014-15-ம் நிதி ஆண்டில் பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கபட்ட ரூ1500 கோடியை திட்டமிடாத பணிகளுக்கு ஒதுக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு இயக்கத்தின் பொதுச் செயலாளர் வி.ஆர்.சந்திரன், பொறியாளர் ஜெயராமனின் லஞ்ச ஊழல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், ஜெயராமன் வைத்துள்ள வருமானத்திற்கு அதிகமான சொத்துகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில்தான், சென்னை கே.கே.நகர் ராமசாமி தெருவில் ஜெயராமனுக்கு சொந்தமான வீட்டில் நேற்று காலையில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். பொறியாளர் ஜெயராமனுக்கு சொந்தமான சேலம் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். பல கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அந்த வீட்டை மதிப்பீடு செய்து வீடியோவில் பதிவு செய்துள்ளனர். ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டில் 50 லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்கள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் வீட்டிலேயே இவ்வளவு பணம், ஆவணங்கள் சிக்கியுள்ளதால், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் வீட்டிலும் சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், பொறியாளர் ஜெயராமன் குறித்த பின்னணி தகவல்கள் குறித்து விவரமறிந்த வட்டாரத்தினர் முக்கிய தகவல்களை கசியவிட்டிருகின்றனர். பொறியாளர் ஜெயராமன், அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சாதிக்கார் என்பதில் தொடங்குகிறது ஜெயராமனின் அதிகார செல்வாக்கு என்கிறார்கள்.
நெடுஞ்சாலைத்துறையில் பதவியில் இருக்கும்போது ஜெயராமன், அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படியே செயல்படுவார். அதற்காகவே, ஜெயராமனின் ஓய்வுக்குப் பிறகும் அவருக்கு பணி நீட்டிப்பு செய்யப்பட்டது. அமைச்சரின் ரகசிய உத்தரவுகள் உதவியாளரான மணி மூலமாக ஜெயராமனுக்கு போகும். இதனால், ஜெயராமன், அமைச்சரின் உதவியாளர் மணிக்கும் நெருக்கமானார்.
ஆளுங்கட்சியின் செல்வாக்கால் ஜெயராமன் மீது எழும் எந்தப் புகாரும் கண்டுகொள்ளப்படுவது இல்லை என்ற நிலையில், ஜெயராமனின் அதிகார துஷ்பிரயோகம் தடை இன்றி நடந்தது. இந்தநிலையில் ஜெயராமன் மீது தொடரப்பட்ட லஞ்ச ஊழல் வழக்கு அடிப்படையில் நடந்துள்ள அதிரடி ரெய்டு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனை சிகிச்சையில் இருக்கின்ற நிலையில், ஏற்கெனவே, ஜெயலலிதா மீது வழக்குகள் நடந்தபோது, தற்காலிக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார். அதேபோல், தற்போதும் அவரே பொறுப்பை வகிப்பாரா என்பதில் சந்தேகங்கள் எழுந்தது. காரணம் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமிக்கு பொறுப்பு வழங்கப்படும் என்ற சூழல் இருந்தது. ஆனால், ஏற்கெனவே, முதல்வராக பதவியில் இருந்ததால் ஓ.பன்னீர்செல்வமே பொறுப்புகள் வகிக்கட்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியதன் பேரிலும் சீனியர் என்பதாலும் ஓ.பி.எஸ்-க்கு பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்தநிலையில், பொறியாளர் வீட்டில் ரெய்டு நடந்தது ஓ.பி.எஸ்ஸுக்குத் தெரியாமல் எப்படி நடக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடுப்பில் உள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், இது அதிகாரிகளின் நடவடிக்கை. இதில், தான் சம்பந்தப்படவில்லை என்று ஓ.பி.எஸ் தெரிவிப்பதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள் minnambalam.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக