புதன், 9 நவம்பர், 2016

ரூபாய் நோட்டு அறிவிப்பு ரிசேர்வ் வங்கி கவர்னர்தான் அறிவிக்க முடியும் ,பிரதமருக்கு அந்த அதிகாரம் இல்லை?

ரூபாய் நோட்டுகள் செல்லாது, வங்கிகள், ஏடிஎம்கள் இயங்காது போன்றவற்றை பிரதமர் மோடி எப்படி அறிவிக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லாது மற்றும் புதிய நோட்டுகள் வெளியிடுவது போன்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கியின் கவர்னர் தான் முறைப்படி அறிவிக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஒரு நாட்டின் பிரதமருக்கு நாட்டின் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரிவிப்பதற்கு எந்த அதிகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்க்து. அமைச்சர் அவை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி இத்தகைய அறிவிப்பை திடீரென்று அறிவித்தது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக