ஞாயிறு, 13 நவம்பர், 2016

மலையாள நடிக ரேகா மோகன் மர்ம மரணம் .. திரிசூரில்

பிரபல மலையாளர் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை ரேகா மோகன்
திருச்சூரில் குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்று போலீசார் தெரிவித்தனர். 45 வயதான ரேகா மோகன் முன்னணி நடிகர்களான மம்மூட்டி (உதயனபலகன்) மற்றும் மோகன் லால் (யாத்ராமொழி) ஆகியோருடன் நடித்துள்ளார். மேலும், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திருச்சூரில் வாடகை வீட்டில் அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக வையூர் போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “ரேகா மோகனின் கணவர் அயல்நாட்டில் பணியாற்றி வருகிறார். ரேகா மோகனிடம் எந்தவொரு பதிலுமே இல்லாததால் அவருடைய வீட்டுப் பூட்டை உடைத்து திறந்த போதுதான் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்கு பதிவுச் செய்யப்பட்டு, அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சொல்லப்பட்டு இருக்கிறது” என்று போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரேகா மோகன் உடல் கண்டு எடுக்கப்பட்ட வாடகை குடியிருப்புக்கு 2 நாட்களுக்கு முன்பு தான் குடியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது  tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக