செவ்வாய், 29 நவம்பர், 2016

அமித் ஷா நோட்டு அறிவிப்புக்கு முன்பாக ஏராளமான சொத்துக்களை வாங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பதற்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சி பல கோடி மதிப்பிலான நிலத்தை வாங்கியுள்ளது தெரிய வந்திருக்கிறது. மேலும் பினாமி பெயர்களில் இதுவரை பாராமரித்து வந்த சொத்துக்களை தனது பெயரில் மாற்றும் நடவடிக்கையும் அவரசர அவரசமாக நடைபெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதில் பாஜக தலைவர் அமித்ஷா முதலிடத்தில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த தரவுகளை சேகரித்து  கேட்ச் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, நவம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து பீகார் மாநிலத்தில் நிலங்களை வாங்கியுள்ள ஆளும் பாரதிய ஜனதா கட்சி , ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக , நிலம் வாங்குவதை நிறுத்தியும் உள்ளது.
மேலும் நிலம் வாங்கியவர்களில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுமார் 10 பேரில் , சிலர் அமித்ஷா சார்பில் வாங்கியுள்ளனர் என்றும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வங்க தேசத்தில் உள்ள திகா நகரின் எம்.எல்.ஏ. மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சன்ஜீவ் சவ்ராசியா கூறுகையில், பீகாரை தவிர பிற மாநிலங்களிலும் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது. நிலங்கள் வாங்குவதற்கு கையெழுத்து மட்டும் தான் நாங்கள் போட்டோம். அதற்கான முழு பணமும் கட்சியிடம் இருந்து தான் வந்தது.முதலில் நான் வேறு சில நோக்கங்களுக்கா தான் நவம்பர் மாதத்தில் நிலங்களை வாங்க மத்திய அலுவலகம் முடிவெடுத்துள்ளதாக நம்பினேன். நிலம் வாங்குவதற்கு பணம், காசோலை போன்ற வெவ்வேறு விதங்களில் பணம் அளிக்கப்பட்டது. மதுபானி , கத்திகர், மதுபூரா, லக்கிசாராய், கிஷ்ன்கான்ச் ஆகிய இடங்களில் நிலங்கள் வாங்கப்பட்டுள்ளது என கூறினார்.
இவ்வாறு வாங்கப்பட்ட நிலங்கள் ரூ.8 லட்சம் முதல் ரூ.1.16 கோடி மதிப்பிலானது. இவை 250 சதுர அடி முதல் அரை ஏக்கர் அளவிலான நிலங்களாக வாங்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அடி ரூ.1.100-க்கு வாங்கப்பட்டது தான் அதிக மதிப்புடையதாக சேட்ச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், யாரெல்லாம் இந்த நிலங்களை தங்கள் பெயரில் வாங்கியவர்கள் என்பது தான்,
பீகார் மாநில பொது செயலாளர் சன்ஜீவ் சவ்ராசியா மூலமாக ரூ.60.13 லட்சம் மதிப்பிலான நிலம் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் சன்ஜீவ் சவ்ராசியா , சில நிலங்களின் பதிவுகளை பாஜக.வின் தலைமை கட்சி அலுவலகம் அமைந்துள்ள 11, அசோக ரோடு என்ற முகவரிக்கு மாற்றியுள்ளார்.
பீகார் மாநிலத்தின் பாஜக துணை தலைவரான லால் பாபு பிரசாத்தின் முகவரி ஆரிய சமாஜ் கிராமம், நர்கத்தியகான்ச் சாலை, பிஎஸ் – நர்கத்தியகான்ச், வெஸ்ட் சம்பரன்.
பீகார் மாநிலத்தின் பாஜக பொருளாளர் , தீலிப் குமார் ஜெய்ஸ்வாலின் முகவரி பூரப்பாலி சாலை , பிஎஸ்- கிஷன்கான்ச் மாநிலம் என்று ஒரு ஒப்பந்தத்தில் பதிவாகி உள்ளது. ஆனால் வேறு சில ஒப்பந்தங்களில் 11, அசோகா சாலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் சில பத்திரப்பதிவுகளில், பாஜக கட்சி பெயரில் கட்சி தலைமை அலுவலக முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி , கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக என கூறி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8 அன்று திடீரென  அறிவித்தார்.  ஆனால் அதற்கு முன்பாகவே பாஜக மற்றும் பாஜகவிற்கு விசுவாசமாக இருக்கும் பல்வேறு பெரும் முதலாளிகளுக்கு செல்லா நோட்டு விவகாரம் ரகசியமாக தெரியப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து முன்கூட்டியே கருப்பு பணத்தை வெள்ளையாக்கியிருப்பதும் தெரிய வந்தது. குறிப்பாக பாஜகவின் அகில இந்திய தலைவர் அமித்ஷா 37 சதவிகித கமிஷன் அடிப்படையில் கருப்பை வெள்ளையாக்கியதும் வெளிச்சத்திற்கு வந்தது.
அதே போல் அடுத்து பினாமி சொத்துக்கள் மீது நடவடிக்கை எடுக்க இருக்கும் திட்டம் முன்கூட்டியே கசிய விடப்பட்டிருக்கிறது என்பதும் தற்போது உறுதி படுத்தப்பட்டிருக்கிறது.
குறிப்பாக அமித்ஷா பல்வேறு நிலங்களை அவரச அவசரமாக தனது பெயரில் மாற்றியிருக்கிறார். அதே போல் பாஜகாவின் பல்வேறு தலைவர்களும் கருப்பு பணத்தின் மூலம் வந்த சொத்துக்களை தனது பெயர் மற்றும் கட்சியின் பெயரில் மாற்றியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இந்நிலையில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் மீது என்று பிரதமர் மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  தீக்கதிர் .காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக