செவ்வாய், 29 நவம்பர், 2016

ஓராண்டில் பாஜகக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும், வாங்கிய சொத்துகளின் விவரங்களையும் வெளிப்படுத்த தயாரா?

ஷாஜஹான்ஷாஜஹான் ரூபாய் நோட்டு செல்லாமல் ஆக்கும் விஷயத்தை பாஜக தன் ஆட்களுக்கு மட்டும் முன்னரே சொல்லி விட்டது எனற குற்றச்சாட்டை முறியடிக்க, பாஜக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரையான தமது வங்கிக் கணக்கு விவரங்களை கட்சித் தலைவர் அமித் ஷாவிடம் கொடுக்க வேண்டும் என மோடி சொன்னதாக பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளன.<அப்படியானால், நவம்பர் 8க்கு முற்பட்ட கணக்குகளை அல்லவா கேட்க வேண்டும்? இந்த விஷயம் ஆறு மாதங்களுக்கு முன்பே / 9 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டோம் என்று கூறுவதால் கடந்த ஓராண்டு கணக்கு விவரங்களை அல்லவா தரச் சொல்ல வேண்டும்?
  • அதையும் கட்சித் தலைவருக்குக் கொடுக்கச் சொல்வதில் மக்களுக்கு என்ன தெரியப்போகிறது? கட்சித் தலைவர் சத்தியசீலரா?
  • எம்எல்ஏக்கள் எம்பிகள் தமது பினாமிகளின் கணக்கில் செலுத்தியிருந்தால் அது எப்படி தெரிய வரும்?
  • இதைக்கூட கொடுக்கச் சொல்லத் தேவையில்லையே? பிரதமர் நினைத்தால் அத்தனை பேரின் கணக்கு விவரங்களையும் வங்கிகளிடமிருந்து தானே பெறலாமே?
  • நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரையான கணக்குகளை கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பை ஜனவரி 1ஆம் தேதி செய்திருந்தால் அதில் ஏதோ கொஞ்சம் அர்த்தம் உண்டு. இன்று – நவம்பர் 29ஆம் தேதி அறிவிப்பு கொடுத்தது ஏன்? இன்னும் மீதமிருக்கிற ஒரு மாதத்தில் போடப்போகிற பணத்தை உங்கள் கணக்கில் போட்டு விடாதீர்கள், வேறு யார் கணக்கிலாவது போடுங்கள் என்று சொல்லாமல் சொல்வதற்கா?
  • கறுப்புப்பணம் என்பது ரொக்கமாகத்தான் இருக்கிறது என்கிற மாயையை இன்னும் உறுதி செய்வதற்குத்தான் இந்த அறிவிப்பா?
  • கூடவே, கடந்த ஓராண்டில் கட்சிக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களையும், கட்சி வாங்கிய சொத்துகளின் விவரங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்த தயாரா?
  • ஷாஜஹான், எழுத்தாளர்; சமூக-அரசியல் விமர்சகர். thetimestamil.com

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக