செவ்வாய், 29 நவம்பர், 2016

8 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின: மனஉளைச்சலில் விவசாயி மரணம்

rajakumaran-farmerநாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த கீழையூரைச் சேர்ந்த விவசாயி ராஜகுமாரன். இவர் 8 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். ஆனால் போதிய மழை இல்லாததாலும் காவிரியில் நீர் வராததாலும் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. பயிர் சாகுபடிக்காக வாங்கிய கடனை எப்படி கட்டுவது என கலங்கிப் போனார் ராஜகுமாரன்.
இதனால் கடந்த நான்கு நாட்களாக அவர் கடும் மனஉளைச்சலில் இருந்ததாக அவருடைய குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். தொடர் மன உளைச்சல் காரணமாக மாரடைப்பு வந்து ராஜகுமாரன் உயிரிழந்துள்ளார். இவரையும் சேர்த்து, தமிழகத்தில் பயிர்கள் கருகிய அதிர்ச்சியில் உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக