திங்கள், 28 நவம்பர், 2016

குஷ்பு : உண்மையாகவே யாரவது கடவுளை பார்த்ததுண்டா?

நடிகை குஷ்பு  சமீபத்தில் கூட ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது 'பொது சிவில் சட்டத்திற்கு' ஆதரவாக தனது கருத்தினை பதிவு செய்து காங்கிரஸ் கட்சிக்குளே சர்ச்சையை கிளப்பினார் . இந்நிலையில் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் வாசகர்கள் எழுப்பிய பல சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு மிக சாதுர்யமான பதில்களை சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் .
அப்படி என்ன தான் கேள்வி எழுப்பப்பட்டது ? நடிகை குஷ்பு சமீபகாலமாக இஸ்லாம் மதத்தையே பின்னப்பற்றுவதில்லை எனவும் ... அந்த நினைப்பையே அவர் மறந்துவிட்டதாகவும் ஒருவர் பதிவு செய்திருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு ''Pls learn 2 understand tat every1 is born a human first..Allah,Bhagwan n Jesus r beliefs..has anyone seen God? It's omnipresent in ur deeds.” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார் .
அதாவது " இந்த உலகத்தில் முதலில் எல்லோரும் மனிதர்கள்.... அல்லா, பகவான், ஜீசஸ் போன்றவர்களை நாம் கடவுளாக நம்புகிறோம். உண்மையாகவே யாராவது கடவுளை பார்த்ததுண்டா ? நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்ல காரியங்களிலும் தான் கடவுள் நிறைந்துள்ளார்" என கூறி இருந்தார்.
உடனே மற்றொரு நபர் 'உங்கள் குழந்தைகள் எந்த மதத்தை பின்பற்றுகிறார்கள் ?' என கேள்வி கேட்டதற்கு. உடனே நடிகை குஷ்பு “Just as we,the parents..Humanity is their religion n being an INDIAN is their community.” என பதிலளித்தார். அதாவது இந்தியன் என்ற சமூகத்தில் மனிதநேயம் என்ற மதம் தான்... தன் பிள்ளைகளின் அடையாளம் என சாதுர்யமாக கூறியுள்ளார். நக்கீரன்.இன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக