ஞாயிறு, 27 நவம்பர், 2016

ரூபாய் நோட்டு பிரச்சினை: இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும்? திவாலாகிறதா?

Ravi pallet(படம்): மோடியின் தான் தோன்றித் தனமான ரூபாய் நோட்டு ரத்து அறிவிப்பால் இந்தியா முழுவதும் 12 கோடி மக்கள் அன்றாடம் செய்துவரும் கூலிவேலைகளைக் கூட இழந்து உணவிற்கு கையேந்தும் நிலைக்கு சென்றுவிட்டனர். மேலும் சிறு குறுதொழில்கள் முற்றிலும் முடங்கிப் போயுள்ளன.
மக்கள் பிரதிநியாக இருக்கும் மோடி அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சர்வாதிகாரத்தனமாய் கடந்த 8-ஆம் தேதி திடீரென தொலைக்காட்சியில் தோன்றி ரூபாய் நோட்டு ரத்து அறிவிப்பை வெளியிட்டார். பாஜக என்னும் கட்சிக்கு மக்கள் பெரும்பான்மை கொடுத்து ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள்; அதன் தலைமைப் பொறுப்பில் மோடி இருந்து வருகிறார்.
அவர் எந்த ஒரு முடிவெடுத்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகள், அதை சமாளிக்கும் முறை போன்றவற்றை அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து நடை முறைப்படுத்தவேண்டும். ஆனால் அனைவருமே ஊழல் வாதிகள், அனைவருமே கருப்புப் பணம் வைத் துள்ளார்கள் என்று கூறிக்கொண்டு,
சர்வாதிகாரத்தனமாக ரூபாய் நோட்டு ரத்து முடிவை வெளியிட்டார்.
இந்த முடிவால் இந்தியாவில் பாதிக்கப்படாத துறைகளே இல்லை என்று சொல்லலாம். அனைத்துத் தரப்பு மக்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வாரணாசி பட்டுப் புடவைத் தொழில்
அதிலும் குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் தான் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உத் திர பிரதேசம் வாரணாசி தொகுதியில் இந்த பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. முக்கியமாக உலகப் புகழ்பெற்ற வாரணாசி பட்டுப் புடவைத் தொழில் அடியோடு சரிந்து போயுள்ளது. இந்தப் பட்டுத்தொழிலை நம்பி சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூலிகளாக உள்ளனர். இவர்களின் தினசரிக் கூலி 150 முதல் 200 ரூபாய் வரைதான்! ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்ற அறிவிப்பால் நூல் கொள்முதல் முதல் சாயம் மற்றும் இயந்திர உதிரிபாகங் களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய ஆடைகளை நெய்வது அறவே நின்றுவிட்டது. விளைவு 13 லட்சம் பேர் தங்களுடைய அன்றாட வரு வாயை இழந்து நிற்கின்றனர். இவர்களை நம்பி இருக்கும் குடும்பங்களும் பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளன.
இவர்களில் பெரும்பாலானோருக்கு வங்கி கணக்கு கிடையாது, இவர்கள் தாங்கள் சேமித்துவைத்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகள் முன்பு மணிக்கணக்கில் நாள்தோறும் நின்று கொண்டிருக்கின்றனர். கடந்த 15 நாட்களில் வாரணாசிக்கு பட்டுப் புடவைத் தொழிலில் ஏற்பட்ட இழப்பு மட்டுமே சுமார் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று வாரணாசி பட்டு நெசவாளர்களுக்கான அமைப்பு தெரிவிக்கின்றது. ‘கைத்தறி மட்டுமின்றி, விசைத்தறி நெசவும் பணப் புழக்கம் இன்றி முற்றிலுமாக முடங்கிக் கிடக்கின்றது. பட்டாடை நெய்வதுதான் வாரணாசியின் முகமும், அதனது அடையாளமும் ஆகும். இன்று அந்த அடையாளம் முற்றிலுமாக முடங்கிப் போயிருப்பது ஒட்டு மொத்த வாணாசி நகரமும் முடக்கப்பட்டிருப்பதான காட்சியையே தந்து கொண்டிருக்கிறது’ என்கின்றனர். மோடியின் அறி விப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் கோடிக்
கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் இனி வரும் மாதங்களில் கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றே அஞ்சப்படுகிறது. ஏற்கெனவே பல இடங்களில் இது தொடங்கி விட்டது.
தற்போதைய நிலைமையில் கந்து வட்டிக்காரர்களிடம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாட்டிக் கொண்டு சின்னா பின்னாமாவார்கள் என்று எச்சரிக்கின்றது தேசிய அளவிலான அமைப்பு சாரா தொழிலாளர்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டிருக்கும் ஒரு அமைப்பு. இது நாட்டின் உற்பத்தியைப் பாதிப்பதுடன் சமூகக் கொந்தளிப் பையும் ஏற்படுத்தும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுக்கின்றது.
மோடியின் நடவடிக்கையால்
1 லட்சத்து 23ஆயிரம் கோடி வீண்!
ரூபாய் நோட்டு ரத்து அறிவிப்பால் அரசுக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் செலவாகப் போகிறது என்று கணக்கிட்டிருக்கிறது இந்திய பொருளா தாரத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் செண்டர் ஃபார் மானிடரிங் இண்டியன் எகானமி (சிவிமிணி) என்கின்ற அமைப்பு. இந்த அமைப்பின் புள்ளி விவரங்கள் அதிர்ச்சி தரக் கூடியவையாக இருக்கின்றன. அக்டோபர் 28ஆம் தேதி புள்ளி விவரப்படி 17.8 லட்சம் கோடி ரூபாய் இந்திய சந்தையில் புழக்கத்தில் இருந்தது. இதில் 86 சத விகிதம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களாகும்.
புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கும், அவற்றை வங்கிகள், ஏடிஎம்கள், அஞ்சல் அலுவலகங் களுக்கு எடுத்துச் செல்லுவதற்கும் 16,800 கோடி ரூபாய் செலவாகும். மோடியின் முடிவால் வர்த்தகத்துக்கு ஏற்பட்ட இழப்பு 61,500 கோடி ரூபாய், வங்கிகளுக்கான இழப்பு - அதாவது மற்ற பணிகளைச் செய்யாமல் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தியதால் ஏற்பட்ட இழப்பு - 35,100 கோடி ரூபாய்களாகும். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வரிசையில் நின்றவர் களால் ஏற்பட்ட மனித வேலை நாள் இழப்புகள் 15,000 கோடி ரூபாய்களாகும்.
வரும் நாட்களில் இந்த பாதிப்புகள் கூடுதலாக இருக் கும் தற்போதைய சூழலில் மோடி கூறியபடி 50 நாட்களில் நிலைமை சீராகப்போவதில்லை. ஊடகங்களைக் கையில் போட்டுக்கொண்டு செய்தியை மறைத்து விடுவதற்கான வேலைகளில் மோடி நேரடியாக ஈடுபட்டுவருகிறார். நேற்று பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் பேசிய மோடி தனது செயலுக்கு 99 விழுக்காடு மக்கள் ஆதரவு தரு கின்றனர். ஆனால் சிலர் அதை கவனத்தில் கொள்ளாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று தனக்கு எதிராக செயல்படும் ஊட கங்களை மறைமுகமாக சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளார். உண்மையில் இன்று நாட்டின் ஒவ்வொரு மட்டத்திலிருந்தும் வரும் தகவல்கள் கவலை தருவனவாகவும், அதிர்ச்சி அளிப்பவையாகவும் இருந்து கொண்டிருக்கின்றன. ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் சந்தையில் விற்பனையா கமல் இருக்கும் காய்கறிகளைக் கொட்டுவது தொடர்கதை யாகிவுள்ளது, விற்பனை நிலையங்களில் வியாபாரம் இன்றி வெறிச்சோடிப் போனது!
தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் ஓடும் நேரம் கணிசமாகக் குறைந்து போனது. வேளாண் பணிகள் பெரியளவுக்கு நின்று போனது. இந்த ஏற்பட்டிருக்கும் அபாயகரமான சூழலை ஊடகங்கள் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. என்ன நடக்கப் போகிறது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், உலகின் முன்னணி பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நாட்டில், 80 சதவிகித பொருளா தாரம் பணப் பொருளாதாரமாக (நீணீsலீ மீநீஷீஸீஷீனீஹ்) இருக்க கூடிய நாட்டில், புழங்கக் கூடிய பணத்தில் 86 சதவிகித ரூபாய் நோட்டுக்களை ஒரே நேரத்தில் செல்லாததென்று அறிவிப்பது மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
பொருளாதார நிபுணர் ஜீன் டேரஸ் இந்த ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கை பற்றி கூறும் போது, “இது வரையில் ரூபாய் நோட்டு திடீரென ரத்துசெய்யப்படட நாடுகள் அனைத்தும் இன்றுவரை பொருளாதாரத்தில் மீளாச்சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்தியா போன்று வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாட்டில் பொருளா தாரத்தில் இந்த நடவடிக்கை என்பது ஆபத்தான விளைவு களை ஏற்படுத்தும். இனி வரும் காலத்தில் ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையால் முற்றிலும் முடங்கிப் போன நாடு இந்தியா என முன்னுதாரணமாகப் பேசப்படப் போகிறது. ஓடிக்கொண்டிருக்கும் குதிரையின் கால்களை குறிவைத்து அடிப்பது போன்ற நிலை உருவாகியுள்ளது. இது நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்'' என்று கூறினார்.
Read more:

ரூபாய் நோட்டு பிரச்சினை: இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும்?
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு, The Only Rationalist Daily News Paper,tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,…
viduthalai.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக