புதன், 9 நவம்பர், 2016

244 டொனால்ட் ட்ரம்ப்.வெற்றியை நோக்கி . 210 ஹிலரி கிளிண்டன் தோல்வி?

உலக நாடுகள் அனைத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் கவர்ந்த அமெரிக்க
ஜனாதிபதி பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. 2 முறை தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்துவரும் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவு அடைவதால், அந்த நாட்டின் புதிய ஜனாதிபதியை (45-வது ஜனாதிபதி) தேர்ந்தெடுப்பதற்காக நடந்த இந்த தேர்தலில், அவரது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் (வயது 69), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் (70) இடையே கடும்போட்டி நிலவியது. இருவரும் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தும், 3 முறை நேருக்கு நேர் விவாதம் செய்தும் அனல் பறந்த பிரசாரத்தில் ஈடுபட்டனர்.அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 538 தொகுதிகளில் 270-ல் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்கள். 


இதனிடையே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கெண்டக்கி மற்றும் இந்தியானா மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். ஹிலாரி வெர்மாண்ட் மாகாணத்தை வென்றுள்ளார். 

இறுதியாக வந்த நிலவரப்படி ஹிலாரி 133 வாக்குகளுடன் பின் தங்கியுள்ளார். இடங்களிலும், 167 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளார். 
வெற்றிக்கு தேவையான இடங்கள் 270 ஆகும். தற்போது வரை டிரம் கையே ஓங்கியுள்ளது. ஹிலாரி கிளிண்டன் பின் தங்கியுள்ளதால் அமெரிக்க பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளன  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக