புதன், 9 நவம்பர், 2016

பங்குச்சந்தை இழப்பு .. 15 நிமிடத்தில் 6 லட்சம் கோடி காலி செய்த மோடி..

15 நிமிடத்தில் 6 லட்சம் கோடி காலி செய்த மோடி..
மோடியின் ருபாய் மாற்ற அறிவிப்பினால் இந்திய பங்கு சந்தை தொடங்கிய 15 நிமிடத்தில் 6 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளது என எகனாமிக்ஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது. பங்கு சந்தை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் சரிந்துக் கொண்டுள்ளதோடு ரூபாயின் சர்வதேச மதிப்பு அதள பாதாளத்தில் போயிருக்கிறது. இதன் விளைவாய் அந்நிய செலாவணி கையிறுப்பில் பெரும் பின்னடைவு உருவாகி பொருளாதார நிலை குழப்பம் பிரமாண்டமாகியுள்ளது.
விலைவாசி உள்ளிட்ட அத்யாவசிய பொருளாதார நகர்வுகள் சந்தையை நிலைகுலைய வைத்துள்ளது. பாதிக்கப்பட போவது சாமான்ய மக்கள். மாலைக்குள் இந்திய பொருளாதாரம் சந்திக்கும் இழப்பை ஈடு செய்ய நீண்டகாலம் பிடிக்கும். மோடியின் இந்த சாகச நடவடிக்கை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பெரும் சாபம்.

வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்திற்கு எந்த சேதாரமும் இல்லை என்பதால் கார்ப்ரேட்டுகள் மகிழ்ச்சி.
அதைவிட ரஜினிகாந்த், குஷ்பு உள்ளிட்ட பொருளாதார மேதைகள் வரவேற்றுள்ளது மோடியின் நல்லெண்ணத்திற்கு ஒரு சர்டிபிகேட்  முகநூல் பதிவு  கவுதமாசன்ன 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக